Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை, மறைக்க பிக்குகள் முயற்சி - ஐரோப்பிய தூதர்களிடம் சிக்கினர்

(JM.Hafeez)

கண்டியில் நடந்த சம்பவம் தொடர்பாக  தான் கவலை அடைந்துள்ளதாகவும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்காக தான் வருந்துவதாகவும் இதன் பின் இத்தகைய ஒரு விடயம் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய சங்கத்தின் தூதுவர் டியுங் லாய் மார்க்குய் தெரிவித்தார்.(27.3.2018) 

ஐரோப்பிய சங்கத்தின் தூதுவர் டியுங் லாய் மார்க்குய், சுவிச்சர்லாந்து தூதுவர் ஹேன்ஸ் வோல்டர் நெடர்கோன், ருமேனியா தூதுவர் விக்டர் சியுடியா, ஆகியோர் (27.3.2107)மல்வத்தை, அஸ்கிரி விகாரைகளுக்குச் சென்று மகாநாயக்கத் தேரர்களிடம் நல்லாசி பெற்றபின் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது-

பௌத்த தர்மம் அகிம்சையைப் போதிப்பதாகவும் அப்படியான தர்மத்தைப் பின் பற்றுவோர் இன்னொரு பிரிவினருக்கு தொல்லை கொடுப்பதாயின் பௌத்த சமயத்திற்கு அது பொருத்தமானதாக இருக்காது என்றார். 

இங்கு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகா நாயக்கத் தேரர்கள் தெரிவித்ததாவது-

இலங்கையில் சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லிம்கள் அமைதியாகவும், ஒற்றுமை மற்றும் சகவாழ்வுடனும் வாழ்கின்ற போது கண்டியில் சில இடங்களில் ஏற்பட்ட மோதலை இனவாத வடிவில் வெளிப்படுத்திக் காட்டுவது ஒரு அறநெறி தர்மமாகாது  என்று மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் தெரிவித்தனர். 

ஐரோப்பிய சங்கத்தின் தூதுவர் டியுங் லாய் மார்க்குய், சுவிச்சர்லாந்து தூதுவர் ஹேன்ஸ் வோல்டர் நெடர்கோன், ருமேனியா தூதுவர் விக்டர் சியுடியா, ஆகியோர் மல்வத்தை, அஸ்கிரி விகாரைகளுக்குச் சென்ற நல்லாசி பெற்றபின் சமயம் மேற்படி மகாநாயக்கத் தேரர்களிடம் ஊடக வியலாளர் கேட் கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர்கள்; இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள்கள் மேலும் தெரிவத்ததாவது-

சகல சமயங்களிலும்  தீவிரவாதிகள் சிறிய அளவில் இருப்பதாகவும் அத்தகைய சிறிய குழுக்கள் சகல நாடுகளிலும் இருப்பதாகவும் இது இலங்கை;ககு மட்டும் உள்ள ஒன்றல்ல என்றும் மகாநாயக்கத் தேரர்கள் குறிப்பிட்டனர். 

இப்படியான நிலையில் பாதிப்பிற்குள்ளான முஸ்லிம்களுக்கு சில பௌத்த மதகுருமார் விகாரைகளில் புகழிடம் கொடுத்துள்ளனர். சமயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தாக்குதலாயின் அப்படியான ஒரு நிலைமை ஏற்பட்டிருக்க முடியாது. 

கண்டி பிரச்சினையானது முஸ்லிமகளுக்கு எதிராக பௌத்தர்கள் மேற்கொண்ட தாக்குதல் என்றும் அதில் சில பௌத்த மதகுருககள் சம்பந்தப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் மற்றும்புகைப்படங்கள் இருப்பதாகவும் ஐரோப்பா சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்தை தாம்  முற்றாக மறுப்பதாகத் தெரிவித்தனர்.  ; இது மிகச் சிறிய பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலாகும் என்றும் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்கள் தாக்கியதாகக் கொள்ள முடியாது என்றும் கூறினார். 

தற்காலத்தில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் தீவிரவாத முஸ்லிம் அமைப்புக்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்கு முழு முஸ்லிம்களும் தொடர்பு பட்டவர்கள் அல்ல என்றும் மல்வத்தை மகாநாயக்கத் தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தெரிவித்தார். 

இலங்கையில் நடந்த சம்பவத்தை பெரும்பான்மை பௌத்தர்கள் ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இப்படியான நிலைமைகள் மேலும் ஏற்படாதிருக்க திறந்த பேச்சு வார்த்தை அவசியமென்றும் சில அரசியல் வாதிகள் தேசிய ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் நடந்துகொள்வதாகவும் தெரிவித்தாபர். 

 இங்கு கருத்து வெளியிட்ட  அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மாநந்த தேரர் தெரிவித்தாவது-

இந்த நாட்டில் வேறு ஒரு அடையாளத்தை கட்டி எழுப்புவதற்கு ஒரு சிறிய குழு முஸ்லீம்களுக்கு மத்தியில் இருப்பதாகவும் அவர்கள் பௌத்த மத குருமார்களுக்கு மட்டுமல்லாது புத்தருக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் சில சமூக வலைத் தலங்களில் எழுதி வருவதாகவும் தெரிவித்தார். 

இந்த நாட்டில் சகல பிரச்சினைகளையும் அரசியல் ரிதியாக அனுகும் நிலை உள்ளதாகவும் மேற்படி மோதலையும் அரசியல் மயப்படுத்த சில முற்படவதாகவும் குறிப்பிட்டார். 

கண்யில் உள்ள அனேக முஸ்லிம் பள்ளிகள் வியாபார நிலையங்கள் என்பன மல்வத்தை மற்றும் அஸ்கிரி விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளிலாகும் என்றார். 

1 comment:

  1. சமயத்தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டே பேசும் பேச்சுக்களில் நச்சுக்கருத்துதான் வருகிறது.சிறிய குழு என்று சொல்லும் இவர்.அந்த சிறிய குழுவை பிடிக்க அரசாங்கத்துக்கு என்ன ஆலோசனை இதுவரை வழங்கினார்கள்.இவர் சொல்லும் சிறிய குழு சில போலீசார்,சில இரானுவத்தார்கள் ,சில அரசியல்வாதிகள்,இவாரானவர்களை கண்டும் காணாமல் இருக்கும் முஸ்லிம்களின் வாக்குகளால் ஆட்சி ஏறிய அரசாங்கம்.இவை அனைத்தும் இவர்களின் பார்வையில் சிறிய குழு.அதாவது,சுமார் ஆயிரம் கோடி நாட்டு சொத்தை தீயிட்டு கொளுத்தியவர்கள் சிறிய குழு.ஆனால் சில சிறுபான்மையினர் எதையாவது எழுதினால் அதை மட்டும் புள்ளி விபரத்தோடு பெரிய தவறு என்று சொல்வார்.புத்த பெருமானை குறையாக கூறியுள்ளனர் என்று கூறிய இவருக்கு தெரியாதா அல்லாஹ்வையும் தூதரையும் அழ குரானையும் கேவலப்படுத்தி ஒரு குழு பேசுகிறது என்று சொல்ல இவருக்கு முடிய வில்லை.உங்க உம்மா உம்மா மற்றவன் உம்மா சும்மா.

    ReplyDelete

Powered by Blogger.