கெட்டிக்கார மாணவியின் எதிர்காலத்தை, நாசமாக்கும் கயவர்கள்
புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பாடசாலை மாணவி ஒருவர் முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கம்பஹா கனேமுல்ல குடா பெல்லன ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்தின் தரம் ஐந்தில் கல்விகற்கும் மாணவியே இவ்வாறு முகமூடி அணிந்துகொண்டு நேற்று திங்கட்கிழமை கம்பஹா வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக போராட்டம் நடத்தியுள்ளார்.
குறித்த மாணவிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும் அதனால் அவரை பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது என்று பாடசாலை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்தே குறித்த மாணவி போராட்டம் நடத்தியுள்ளார்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாணவி முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டை விசாரணை செய்த மனித உரிமைகள் ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட பாடசலை அதிபரை அழைத்து, மாணவியை மீண்டும் பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளும்படி கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.
எனினும் மீண்டும் அதே குற்றச்சாட்டு குறித்த மாணவி மீது சுமத்தப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி இந்த வருடம் நடைபெறவுள்ள ஐந்தாம் தரத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என்பதோடு ஒவ்வொரு வருடமும் தவணைப் பரீட்சைகளில் முதலாவது இடத்தையே வகித்து வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. DC
Foolishness of Sri Lanka Sinhala culture
ReplyDeleteஎங்களில் நிறைய முஸ்லீம் பாடசாலைகளில் சிங்கள மொழியில் கட்பிக்கும் பாடசாலைகளும் இருக்கின்றன அந்த பாடசாலைகளில் சரி இந்த பிள்ளைக்கு படிப்பதட்கு யாரு சரி முன் வந்து உதவ கூடாதா ??அவ்வாறு யாரு சரி முன் வந்து பெரும் தன்மையாக உதவினால் நல்லதொரு சமூக ஒற்றுமையும் அன்பும் எல்லா சமூகத்திலும் நல்லிணக்கத்தை ஏட்பபடுவதட்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றன,அது மட்டுமல்லாமல் எங்களில் நிறைய முஸ்லீம் சகோதர்கள் முன் வந்து இந்த பிள்ளைக்கு உதவுவார்கள் என்ற சந்தேகமில்லை.
ReplyDeleteI am requesting to let me know the solution to this problem
ReplyDeleteஇந்தக்கருத்தை நானும் ஆதரிக்கிறேன் முஸ்லிம் பாடசாலைகள் இம்மாணவியை சேர்த்தால் நமது மாணவர்கள் படிக்கும் சிங்கள பாடசாலை அதிபர்களுக்கு விளங்கும்
ReplyDelete