பெற்றோரின் டெலிபோன் மூலம், இனவாதம் பரப்பும் பிள்ளைகள் - கருணை காட்ட முடியாது என பொலிசார் எச்சரிக்கை
பெற்றோரின் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்தி சில பிள்ளைகள், வகுப்புவாத மற்றும் சமய விடயங்கள் தொடர்பான செய்திகளை பரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ரகசிய காவல்துறை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பல பாடசாலை மாணவர்கள் இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாணவர்கள் தம்மிடையே சமூக வலய தளங்களை ஸ்தாபித்து அதன் ஊடாக செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டங்களுக்கு அமைய இப்படியான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 7 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டை பாதிக்கும் இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மாணவர்களாக இருப்பினும் அவர்களுக்கு கருணை காட்ட முடியாது எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Then jaathika hela urumaya omalbe thero gave recism statment on lastweek????what will happend????
ReplyDelete