Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்காக கவலை, இனிமேல் அப்படி நிகழாது - ஜெனீவாவில் இலங்கை அரசு

இலங்­கையில் நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூற­லையும் ஏற்­ப­டுத்த அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்­றது என்று வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன நேற்று  ஜெனிவா மனித உரிமை பேர­வையில் தெரி­வித்தார். 

ஜெனிவா மனித  உரிமை பேர­வையில் நேற்று நடை­பெற்ற  இலங்கை ஜெனிவா  பிரே­ர­ணையை எவ்­வாறு  அமுல்­ப­டுத்­தி­யது என்­பது  குறித்­தான   விவா­தத்தில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

2015 ஆம் ஆண்டு  இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு   இரண்டு வருட கால நீடிப்­புக்­குள்­ளான  பிரே­ர­ணையை  இலங்கை அர­சாங்கம்  எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த    ஐ.நா.  மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனின் அறிக்கை மீதான விவா­தமே இவ்­வாறு நடை­பெற்­றது.    

திலக் மாரப்­பன  தனது உரையில் அங்கு  மேலும் குறிப்­பி­டு­கையில் 

நான் அமைச்­சர்­க­ளா­ன­சரத் அமு­னு­கம மற்றும் பைஸர் முஸ்­தபா ஆகி­யோ­ருடன் வந்திருக்­கின்றேன். இலங்­கையில் சட்டம் ஒழுங்கு சரி­யாக செயற்­ப­டு­கி­றது. 

மனித உரிமை பாது­காக்க நட­வ­டிக்கை எடுத்­து­ருக்­கிறோம். காணாமல் போனோர் குறித் து ஆராய அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 70 வீத­மாக காணிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. நட்ட ஈடுகள் வழங்கும் அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. பயங்­க­ர­வாதம் தடைச்­சட்டம் நீக்­கப்­பட்டு புதிய சட்­ட­மூலம் கொண்டு வரப்­படும். 

அண்­மைய காலங்­களில் ஏற்­பட்ட வன்­மு­றைகள் தொடர்பில் கவலை அடை­கிறோம். இதன் பின்னர் இவ்­வாறு வன்­மு­றைகள் ஏற்­பட இடமளிக்கப்பட மாட்டோம். இலங்கையில் அனைவரும் சமஉரிமையுடன் வாழ உரிமையுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

3 comments:

  1. faisar musthafa is a national list mp. we are not sure where his priorities are. my expectation is this govt will punish the DIGANA wrong doers to the maximum allowed in the law so no one in the future even dare to dream about violence against any community. then we can move forward from developing to developed nation soon. GOD BLESS SRI LANKA.

    ReplyDelete
  2. கலவரங்களுக்காகக் கவலையடைவதுடன், மீண்டும் இவ்வாறு நடைபெறாது என்று சும்மா வார்த்தைகளை உதிர்வதற்காகத்தான் இவர்கள் சென்றுள்ளார்கள்!

    ReplyDelete
  3. If you say that SLK is following the Law correctly, First Arrest those who are leading hate speech against minority.. But till today he and his party is left free to shout with no opposition.

    Do first and Then inform UN of what you have DONE.

    ReplyDelete

Powered by Blogger.