Header Ads



ஓநாய்க்கு டிரம்பின் பெயரை சூட்டிய விவசாயி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசவாவைச் சேர்ந்த விவசாயி தனது வளர்ப்பு ஓநாய்க்கு டிரம்பின் பெயரை சூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசவாவைச் சேர்ந்த ரெக்ஸ்கா என்ற விவசாயி நான்கு ஓநாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார். வனப்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த ஓநாய்களில் ஒன்றிற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை சூட்டியுள்ளார். இது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து பேசிய ரெக்ஸ்கா, 'அமெரிக்க பிரதமர் டிரம்ப் அதிக ஆற்றல் கொண்டவர். மிகவும் தைரியமானவர். அவரின் அனைத்து குணங்களும் பிடித்ததால் தான் எனது ஓநாய்க்கு டிரம்ப்பின் பெயரை சூட்டினேன். எனது ஓநாயும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும். அதனுடையை செயல்கள் டிரம்பை ஒத்திருக்கும்' என கூறினார்.

1 comment:

  1. கண்ட கண்ட இடத்தில் கக்கா இருக்கும் ஓநாய் இந்த குணம் அவரிடம் இருக்குமே.

    ReplyDelete

Powered by Blogger.