Header Ads



தேர்தலுக்கு பின் நடந்ததென்ன..? (உள்ளக தகவல்கள்)

ஐக்கிய தேசிய முன்னணி தனி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க தயார் என அந்த கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான தீர்மானம் பிரதமரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஒன்று கூடி கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

ஐக்கிய தேசிய கட்சி தனி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் அடங்களாக சுமார் 50 பேர் அடங்கிய குழுவினர் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்றில் தற்போது 105 ஆசனங்களை கொண்டுள்ளதுடன், அருதி பெரும்பான்மையை நிலைநாட்ட 113 ஆசனங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக, தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதி, இராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்களின் ஆதரவு கிடைக்கப்பெறும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதுதொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது ஐக்கிய தேசிய முன்னணி தனி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க உள்ளமை தொடர்பான யோசனையை ஜனாதிபதிக்கு அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அங்கத்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையே நேற்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து நடாத்திச் செல்ல வேண்டுமெனின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியில் இருந்து விலக்க வேண்டும் என அமைச்சர்கள் இதன் போது யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.