Header Ads



வானில் பறக்கும்போது, கழன்று விழுந்த என்ஜின்

விமானம் ஒன்றின் என்ஜின் வானத்தில் பறக்கும் போதே பாதியில் கழன்று விழுந்து இருக்கிறது.

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஹவாய்க்கு யுனிடைட் ஏர்லைன்ஸ் விமானம்  363 பயணிகளுடன்  வானத்தில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது விமானத்தில் சிறிய அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர். பிறகு பெரிய சத்தம் ஒன்று கேட்டு இருக்கிறது. பார்த்தால் ஒரு பக்கம் இருந்த என்ஜினின் மேல் பகுதி கழன்று விழுந்துள்ளது.

உடனே விமானம் நிலைதடுமாறி ஆடியுள்ளது விமான பயணிகள்  என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கிறார்கள்.  உடனடியாக  பயணிகளுக்கு அவசரக் காலத்தில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் மீதம் இருக்கும் மூன்று என்ஜின்களை வைத்துக் கண்டிப்பாக தரையிறக்க முடியும் என்றும் விமானிகள்  தைரியம் கூறியுள்ளனர். 

இந்த நிலையில் பல மணி நேரப் போராட்டத்திற்கு பின் அந்த விமானம் ஹவாயில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 363 பயணிகள், 8 விமான பணியாளர்கள், 2 விமான ஓட்டிகள் ஆகியோருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.

கீழே விழுந்த  என்ஜினின் ஒரு பாதி விமானத்திலேயே இருந்துள்ளது. மீதி பாதி பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளது.

ஒரு சிறிய போல்ட் செய்த பிரச்சினையே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமான ஓட்டி கூறியுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments

Powered by Blogger.