Header Ads



பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் - ஆதிவாசிகள் அறிவிப்பு


எதிர்வரும் காலத்தில் ஆதிவாசி ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்துகொள்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ தெரிவித்துள்ளார்.

இதனை இலக்காக கொண்டு எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமது பிரதிநிதி ஒருவரை நியமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆதிவாசிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற கலாச்சாரம் வெளிநாடுகளில் உள்ள போது இலங்கையில் இல்லை.

இலங்கையில் வாழும் ஆதிவாசிகளின் தேவைகளை பூர்தி செய்வதற்கும் அவர்களது, இருப்புக்கும் மக்கள் பிரதிநிதித்துவம் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இவர்கள் தான் நாட்டின் உண்மையான உரிமையாளர்கள் ஆனாலூம்வொன்று இலங்கைக்கு முதல் முதலில் முஸ்லீம் மனிதர் தான் காலடிவைத்துள்ளார் என்று வரலாறு கூறுகின்றது அது தான் நபி ஆதம் (அலை) அவர்கள்.அன்னாரின் கால் பதிந்த இடம் பவாத மலை.

    ReplyDelete
  2. ஆதாமின் நேரடி வழித்தோன்றல்களான ஆதிவாசிகளுக்கு, மீதிவாசிகளான நமக்குள் உருவாக்கிக் கொண்டிருக்கும் சாதி, இன, குல, நிற, வர்க்க, பிரதேச, மொழி மற்றும்  பொருளாதார பேதா பேதங்களுக்கு அப்பால் மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பம், என்ற கொள்கையோடு ஆழ, ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும்தான்.

    அதற்கு முன்,  இப்போது பரவலாக  எல்லோரும் எதிர்பார்க்கும் நம்பிக்கை நட்சத்திரமான JVPக்கு ஓர் அருமையான சந்தர்ப்பத்தை வழங்கி, ஆதிவாசிகளினதும் அவர்களின் வழித்தோன்றல்களான நமதும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முயல்வோமாக!

    ReplyDelete

Powered by Blogger.