Header Ads



ஜனாதிபதி மீது, சுஜீவ சேனசிங்க குற்றச்சாட்டு

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நடந்த மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பான சகல தகவல்களையும் வெளியிடப் போவதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் நடந்த பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மறைத்து வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகித்த கடந்த அரசாங்கம் 2008ஆம் ஆண்டு எவ்வித அனுமதியும் இன்றி 4,000 பில்லியன் ரூபாவை கொள்ளையிட அனுமதி வழங்கியது. இதுதான் உண்மை. இதனை எதிர்காலத்தில் வெளியிடுவேன்.

எமக்கு சேறுபூச ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடாது ஒழித்து வைத்துள்ளார். அப்பாவி என்பதால், ரணில் விக்ரமசிங்க விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி பெறப்போகும் வெற்றியை தடுக்கும் நோக்கில் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.