Header Ads



காத்தான்குடியில் மஹிந்த, மக்களுடன் சிநேகபூர்வ உரையாடல்


பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். 

காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் ஏ.எல்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜி.எல்.பீரிஸ் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள்,அரசியல் பிரமுகர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்களத்திலும், தமிழிலும் காத்தான்குடி மக்கள் மத்தியில் உரையாற்றியதோடு மேடையில் இருந்து இறங்கி மக்களோடும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





6 comments:

  1. Iravil wilundha kuliyil
    Pahal vila wendaam

    ReplyDelete
  2. May Allah guide us to follow the order of not holding on to the hands of Non-Mahram.

    The best of Muslims and Messenger of Islam Muhammed (sal) disliked this act. How come today we can call ourself Muslims but do not obey his teaching and without any shyness we do the oppposit.

    May Allah Guide our Sisters and Also brothers in this issue.

    ReplyDelete
  3. Avavukku Muthalla Kalyaanem Pesi Kodungo

    ReplyDelete
  4. what a pity awaiting our ladies... don't they know who is mahram and who is not... if they dont know what is the use of studying.. these are all problems created by parents... they have to fear God.

    ReplyDelete
  5. மஹிந்த தமிழில் மட்டுமல்ல சந்தப்பத்துக்கு ஏற்ப அறபியிலும் பேசும் கபோதி அது சினேக பூர்வ உரையாடல் அல்ல சினெக் (பாம்பு) பூர்வ உரையாடல் என்பதை மொட்ட சோனிகள் அறிந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  6. They want to become politicians and the beginning of it is touching the hands of non mahrams. To become a politician people are ready to to do anything even betray their own community and faith.

    ReplyDelete

Powered by Blogger.