Header Ads



தேநீர் அருந்தவே, அமைச்சரவையிலிருந்து வெளியேறினேன் - ஜனாதிபதி

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தாம் உபேதசம் ஒன்றை வழங்கியதாகவும், அதனை ஊடகங்கள் பல்வேறு வகையில் அறிக்கையிட்டிருந்தாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அல்பிட்டிய பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்த அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பௌத்த தத்துவ அடிப்படையில் தாம் நேற்று அமைச்சரவையில் உபதேசத்தை வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுமார் 30, 35 நிமிடங்கள் உபதேசம் வழங்கிவிட்டு, அரசாங்கத்தை சிறந்த முறையில் கொண்டுசெல்லவேண்டும் என்றும் அதற்கு தயாராக வேண்டும் என்றும் கூறியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பின்னர், இது குறித்து சிந்தனை செய்யுமாறு கூறி, இன்னும் சற்று நேரத்தில் வருவதாகக்கூறிச் சென்று, தாம் தேநீர் அருந்திவிட்டு வந்து அமைச்சரவையில் அமர்ந்து கூட்டத்தை தொடர்ந்ததாக ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

3 comments:

  1. அமைச்சரின் பேச்சாளர் சொன்னாரே அவர் அவசரமாக பேல ஓடினார் என்று .

    ReplyDelete
  2. Rajitha Seneratne is the "GOBBELLS" of the "Yahapalana Government. He is a baldy liar from the beginning. Muslims should NOT vote any of his supporters contesting the local elections in Beruwela this time, Insha Allah. "The Muslim Voice" has warned about this liar many times.

    Noor Nizam.
    Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.