7 ஆம் திகதிவரை, கதவு திறந்திருக்கும் - சந்திரிக்கா
மஹிந்த குழுவிலுள்ள நல்லவர்களுக்கு மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் கட்சியின் கதவு திறந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் அக்கட்சியின் போஷகருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலுள்ளவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சென்றவர்கள். அவ்வாறு சென்றவர்களுள் நல்லவர்களும் உள்ளனர். இவர்கள் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள அவகாசம் வழங்குகின்றோம் எனவும் வத்தளையில் நேற்று (20) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் கூறினார்.

Post a Comment