Header Ads



ஹரீஸ் தலைமையில், கல்முனை மாநகர சபைக்கான புதிய 5 மாடிக் கட்டடம் அமைக்கும் பணி


கல்முனை மாநகர சபைக்கான புதிய 5 மாடிக் கட்டடம் அமைப்பதற்கான படவரைபு உள்ளிட்ட ஆரம்ப பணிகளை மேற்கொள்ளுவதற்கான கட்டடக்கலை நிபுணர்கள் குழுவுடனான கலந்துரையாடல் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் நேற்று (27) சனிக்கிழமை கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கட்டடக்கலை வடிவமைப்பு நிபுணர் சேனக்க, தொழில்நுட்ப நிபுணர் வித்தியாரத்ன, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரி. சர்வானந்தா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அல்தாப் ஹூசைன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிகாங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமானி அல்ஹாஜ் ரவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை மாநகர சபைக்கான புதிய 5 மாடி கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

குறித்த 5 மாடி கட்டடத்தின் தோற்றப்பாடு மற்றும் உள்ளக அமைவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டு அதற்கமைவாக கட்டடக்கலை வடிவமைப்பு நிபுணர் குழுவினால் கல்முனை மாநகர சபைக்கான கட்டட வரைபடம் தயார்படுத்தப்படவுள்ளது.  

அதற்கமைவாக வரைபட வரைபினை மேற்கொள்வதற்கான பணியினை ஆரம்பிக்கும்வகையில் குறித்த கட்டடக்கலை நிபுணர்கள் குழுவினால் அக்கலந்துரையாடலைத் தொடர்ந்து நில அளவை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.    

(அகமட் எஸ். முகைடீன்)

No comments

Powered by Blogger.