Header Ads



4 ஆயிரம் கோடி ரூபாவை, வாரியிறைக்கத் தயார்

2018 பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் பணத்தை வாரியிறைக்கத் தயாராகியுள்ளன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் ஊடாக 4 ஆயிரம் கோடி ரூபா பணம் இவ்வாறு செலவிடத் தயாராக்கப்பட்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல அமைச்சர்கள் சிலரின் ஊடாக தமது கட்சியின் சகல வேட்பாளர்களுக்கும் ஆகக்குறைந்தது 15 இலட்சம் ரூபா வீதம் பணத்தைப் பகிர்ந்து கொடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.

அத்துடன், இந்த நிதிக்கு மேலதிகமாக பொருட்கள் மற்றும் பிரசார வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிதி மற்றும் உதவிகள் ஜனவரி மாதத்தின் ஆரம்பத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படும் என்று அறியமுடிகின்றது. பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.