Header Ads



சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் 19000 வழக்குகள்

எதிர்வரும் ஜனவரி முதல் மூன்று சிறப்பு நீதிமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவை மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வாக நடத்தப்பட்டு அவற்றில் மிக முக்கிய வழக்குகள் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் சுமார் 19000 வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பார்வையில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே அந்த வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.