Header Ads



சிராஸ் நூர்தீனுக்கு எதிராக, போலிப் பிரச்சாரம் - RRT முடங்கும் அபாயம்

-AAM. Anzir-

முஸ்லிம்களிடையே சட்டத்துறை மற்றும் சமூக விவகாரங்களில் பிரபலம் பெற்று விளங்கும்  சிராஸ் நூர்தீனுக்கு எதிராக போலிப் பிரச்சாரத்தை சில தரப்புகள் முன்னெடுத்துள்ள நிலையில், இலங்கைத் தீவில் பௌத்தசிங்கள இனவாதிகளை சட்டத்தின் மூலம் கட்டிப்போடச் செய்வதில் ஓரளவு வெற்றி கண்டுள்ள  முஸ்லிம் சட்டத்தரணிகளை கொண்ட RRT எனப்படும் அமைப்பு கலைபடும் அபாயம் உருவாகியுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

கடந்த 2 வருடங்களாக கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களை இணைத்து ஓரணியில் செயற்படவும், பலம் பொருந்திய அமைப்பாக கட்டியெழுப்புவதிலும்  சிராஸ் நூர்தீனின் பங்களிப்பு மகத்தானதாக இருந்தது.

இவ்வருடம் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களை சம்மேளன செயலாளர் பதவியிலிருந்து மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் விலக முயன்றபோது, கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் அவரிடம் முன்வைத்த வலுவான கோரிக்கையை அடுத்தும் சில முஸ்லிம்கள் அவரிடம் சென்று கட்டிப்பிடித்து கதறியழுத நிலையிலும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களை சம்மேளன செயலாளர் பதவியிலிருந்து விலகும் தனது முடிவிலிருந்து சிராஸ் பின்வாங்கினார்.

மேலும் செயலாளர் பதவிக்கான தேர்தலில், அதிகப்படியான வாக்குகளினால் செயலாளராகவும் தெரிவானார்.

எனினும் சிராஸ் நூர்தீன்  மீது காழ்புர்ணர்வு கொண்ட சில சக்திகள், அவர் மீது சேறடிப்பதிலிருந்தும் பின்வாங்கத் தவறவில்லை.

முஸ்லிம்களிடையே அவருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு தம்மை ஆட்டம்காண வைக்கும் என்பதனால் அவரை மட்டம்தட்டும் பிரச்சாரங்களை மெல்லமெல்ல ஆரம்பித்தனர்.

மேலும் பொதுபல சேனாவுடன் முஸ்லிம் தரப்பு மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு சிராஸ் நூர்தீன்  வில்லன் போன்றும் சித்திரிக்கப்பட்டார். எனினும் நாம் நன்கு அறிந்தவகையில், அவர் வில்லன் அல்ல.

பல பௌத்தசிங்கள இனவாதிகளுக்கு எதிராக வழக்குகளை தொடுத்தவர் மற்றும் நீதிமன்றத்தில் இதுபற்றி வாதாடியவர் என்றவகையில் குறித்த பேச்சுவார்த்தை பற்றி விழிப்புடன் இருந்தார்.

சிராஸ் நூர்தீனுடைய இந்த விழிப்புணர்வை சரிவர புரிந்துகொள்ளாத சில முஸ்லிம்கள், அவர் மீது தாக்குதல் நடத்துவதில் இன்பம் அனுபவித்தனர். சமூக ஊடகங்களில் பொய்யை கட்டவிழ்த்துவிட்டனர். 

மேலும் பகிரங்கப்படுத்த முடியாத சிலரின், இரட்டைமுக செயற்பாடுகளினாலும் சிராஸ் நூர்தீன் கவலையடைந்தார்.

முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம், சிராஸ் நூர்தீனுக்கு ஆறுதல் சொல்வதில் நாம் தவறவில்லை.

தற்போது நிலைமை எல்லை மீறிச்செல்கையில்,  முஸ்லிம் சட்டத்தரணிகளை கொண்ட RRT யை கலைக்கும் எண்ணத்தில் இருப்பதாக அறிகிறோம்.

சிராஸ் நூர்தீனுடன் இணைந்து பணியாற்றும் ஏனைய முஸ்லிம் சட்டத்தரணிகளும் அவர் எத்தகைய முடிவை மேற்கொண்டாலும் அதற்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் சமூகமே.

இந்நிலையில் RRT யை கலைக்கும் முடிவு குறித்து, சிராஸ் நூர்தீன் சிந்திக்க வேண்டுமென முஸ்லிம் சமூகத்தின் பெயரால் கோரிக்கை விடுக்கிறோம்

அவரது பணியும், சேவையும் முஸ்லிம் சமூகத்திற்கு தொடரவேண்டும்.

இதில் ஆர்வமுள்ள முஸ்லிம் சகோதரர்கள், சிராஸ் நூர்தீனுடன் தொடர்புகொண்டு அவரது முடிவை வாபஸ்  பெறச்சொல்லி அழுத்தம் பிரயோகிக்க  வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கிறோம்

11 comments:

  1. brother we need your support, do your job for community for sake of allah, do not care about rubbish peopls.

    ReplyDelete
  2. Very concerning news. RRT is in forefront in advocating for Muslims in many instances. As used to, some of our Umma will always DO sling mud at those doing good to them. It's the duty of the leaders to handle this more delicately.

    ReplyDelete
  3. ஜனாப் சிராஸ் நூர்தீன் அவர்கள் தனதுயிரை துச்சமாக நினைத்து நமது சமூகத்துக்காக முன்னிப்பதற்கு அல்லாஹ் அவரையும் அவருடைய குடும்பனரையும் பாதுகாப்பானாக, மேலும் சகோதர்களே இவரைபோன்றுள்ள பலமுஸ்லிம் சமூகசேவையாளர்களுக்கும் நாங்கள் என்றைக்கும் துணையாக நிக்க
    வேண்டும். இன்றைக்கு நமது சமூகத்தில் டீலுக்கு மாறடிக்கக்கூடிய அரசியல்தலைவர்கள்தான் அதிகமாக உள்ளார்கள் தவிர முஸ்லிம்களின் பிரச்சனைக்கு முடிவு காணக்கூடியவர்கள் யாருமில்லை. அவர்களுக்கு நாளுக்கு நாள் கட்சியை வளர்ப்பதிலும் புதிய கட்சிகளை உருவாக்குவதிலும்தான் குறியாக உள்ளார்கள். எனவே ஒன்றுபடுங்கள் Mr சிராஸ் நூர்தீன் அவர்களின் கரத்தை பலப்படுத்துவோம்.

    ReplyDelete
  4. Dead sir.always we are with you

    ReplyDelete
  5. Siraj dont cave in to vested interst .B Bold n Go ahead with your holy noble mission.
    We r behind u . We beg u not let us down .
    We r in dire need of brave lions like u at this critical juncture.
    May Allah swa strnghen u with more n more stamina n vitality.

    ReplyDelete
  6. Siraj dont cave in to vested interst .B Bold n Go ahead with your holy noble mission.
    We r behind u . We beg u not let us down .
    We r in dire need of brave lions like u at this critical juncture.
    May Allah swa strnghen u with more n more stamina n vitality.

    ReplyDelete
  7. இலங்கையில் இருக்கும் முஸ்லீம்களில் தகாலத்தில் நேசிக்கும் ஒருவர் சகோ..சிறாஜ் நூர்தீன் அவர்கள் அவருக்கு துஆவும் செய்கிறேன் மனிதன் எலும்பு இல்லா நாக்கால் எதையும் பேசுவான் ஆனால் நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே நம்புங்கள் அல்லாஹ் உங்களை கைவிட மாட்டான்

    ReplyDelete
  8. Sir we and our dua always for you. Please do everything in the name of allah . Don't worry about other rubbish people. Allah will stay with you.

    ReplyDelete
  9. Sir we are always with you
    Pls dont take any bad decisions
    Pls think about our muslim society
    May Allah except all your good deeds
    And he will give good health for u and all ur team including their family members

    ReplyDelete
  10. We could understand who is behind this? They will be chased by people very soon... Brother Siras... by the grace of almighty Allah entire Muslim community is behind you.. Please go ahead... Don't give single chance to racist and Muslim labelled silly politicians...

    ReplyDelete
  11. It's our paramount duty to join hand with brother Shiraz Noordeen. All hypocrites must be disclosed to the Muslim community.

    ReplyDelete

Powered by Blogger.