Header Ads



மக்களிடம் நன்றாக, திட்டு வாங்குகிறேன் - மைத்திரி உருக்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையினால் தான் நன்றாக மக்களிடம் திட்டு வாங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாதுலுவாவே சோபித்த தேரரின் இரண்டாவது நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதாக சிலர் சிந்திக்கின்றனர். மக்கள் அவ்வாறு சிந்திப்பதில் தவறில்லை.

வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம் செய்தால் என்னை தான் திட்டுகின்றனர். மருந்து வழங்குவது நான் என நினைக்கின்றார்கள்.

பாடசாலையில் மாணவன் ஒருவரை சேர்க்க முடியவில்லை என்றால் ஜனாதிபதி தான் குற்றவாளி. ஜனாதிபதி தான் மாணவர்களை இணைப்பதாக சிந்திக்கின்றார்கள்.

இவற்றிற்கு காரணம் உள்ளது. மக்களின் பக்கத்தில் அவ்வாறு சிந்திப்பது சரியான விடயம் தான். அவை அனைத்தையும் செய்வதற்கு நாட்டு ஜனாதிபதிகள் பழக்கியுள்ளனர். அதுவே அவ்வாறு சிந்திப்பதற்கு காரணம்.

இந்த நாட்டு ஜனாதிபதிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் மாத்திரமே விநியோகிக்கவில்லை என நான் நினைக்கின்றேன். ஏனைய அனைத்தையும் செய்து விட்டார்கள்.

இதனால் நாட்டில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டு விட்டால் ஜனாதிபதி தான் காரணம் என பொது மக்கள் நினைக்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.