Header Ads



அரசியலமைப்பு விடயத்திலும், பிரிந்து நிற்கும் முஸ்லிம் சமூகம்


புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் சூடு­பி­டித்­துள்­ளன.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட வேண்டும் எனும் கோரிக்­கையை அழுத்தம் திருத்­த­மாக முன்­வைத்­துள்ள நிலையில் அதற்கு முஸ்லிம் சமூகம் தனது ஆத­ரவை வழங்க வேண்டும் என்றும் கோரி­யி­ருக்­கி­றது. அதே­போன்று வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு அல்­லது கரை­யோர மாவட்­டத்தைத் தர வேண்டும் எனும் கோரிக்­கையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் முன்­வைத்­துள்­ளது. வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­படக் கூடாது என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி, தேசிய காங்­கிரஸ் போன்ற கட்­சிகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இதற்­கி­டையில் அர­சி­ய­ல­மைப்பின் உள்­ள­டக்கம் மற்றும் அதில் முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை உள்­ள­டக்­கு­வது தொடர்பில் ஆங்­காங்கே கருத்­த­ரங்­கு­களும் நடை­பெற்று வரு­கி­றன்­றன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் கடந்த வாரம் இது குறித்து இரு வேறு கருத்­த­ரங்­கு­களை நடத்­தி­யி­ருந்­தன. கிழக்கு மாகாண பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னமும் இது தொடர்­பான கருத்­த­ரங்கு ஒன்றை நேற்று முன்­தினம் நடத்­தி­யி­ருந்­தது. கொழும்­பிலும் நாட்டின் வேறு பல பகு­தி­க­ளிலும் வெவ்­வே­று­பட்ட முஸ்லிம் அமைப்­பு­களால் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான கருத்­த­ரங்­குகள், கலந்­து­ரை­யா­டல்கள் எதிர்­வரும் நாட்­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான நிலையில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் உல­மாக்­க­ள­டங்­கிய குழு ஒன்றை நிய­மித்­துள்­ள­தா­கவும் முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயா­ரிக்­க­வுள்­ள­தா­கவும் அறி­வித்­துள்­ளது. மறு­புறம் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள் அடங்­கிய முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களும் இது தொடர்­பான முன்­னெ­டுப்­பு­களில் ஈடு­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.
புதிய அர­சி­ய­ல­மைப்பின் உள்­ள­டக்கம் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் கட்­சிகள், புத்­தி­ஜீ­விகள், உல­மாக்­களின் இந்த ஆர்வம் மெச்­சத்­தக்­க­தாகும். இருப்­பினும் இந்த முயற்­சிகள் அனைத்­துமே வெவ்­வேறு துரு­வங்­க­ளாக தனித்­தனி முகாம்­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­துதான் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

முஸ்லிம் அர­சியல் கட்­சி­களைப் பொறுத்­த­வரை இது விட­யத்தில் வழக்­கம்­போன்று ஏட்­டிக்குப் போட்­டி­யான நகர்­வு­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஒரு­வ­ரை­யொ­ரு­வர் குற்­றம்­சாட்­டு­வ­திலும் ஒரு கட்­சியின் யோச­னையை மறு கட்சி மறுத்­து­ரைப்­ப­தி­லுமே காலம் கடத்­தப்­ப­டு­கி­றது. மாறாக ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் சார்­பிலும் ஏற்றுக் கொள்­ளத்­தக்க யோச­னை­களை முன்­வைப்­ப­தற்கு எவரும் தயா­ரா­க­வி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

என­வேதான் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­வாங்­கப்­பட வேண்­டிய முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை ஒட்­ட­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் கருத்­தாக மாற்றி அதனை அனைத்து தரப்­பி­னாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வலு­வா­ன­தொரு ஆவ­ண­மாக மாற்­றி­ய­மைக்க வேண்­டி­யதே தற்­போதுள்ள பணி­யாகும். மாறாக இந்த விடயத்திலும் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டு தனித்தனி முகாம்களாக செயற்படுவதானது சமூகத்தின் எதிர்காலத்தையே கடுமையாகப் பாதிப்பதாக அமையும். 

அந்த வகையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் இணைந்து செயற்படக் கூடிய மையப்புள்ளி ஒன்றை அடையாளம் கண்டு அதனை நோக்கி அனைவரையும் ஒருமுகப்படுத்த வேண்டும். இதனைச் செய்ய சிவில் சமூக சக்திகள் முன்வர வேண்டும்.

(இன்றைய -10- விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)

2 comments:

  1. ஹக்கீமை தவிர மற்ற அனைவரும் வடக்கு கிழக்கு இணைக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர் .
    தமிழர் விடுதலை கூட்டணியின் முஸ்லீம் குரலாக காணப்படும் ஹக்கீம் மட்டுமே இந்த ஒற்றுமைக்கு பாதகமானவராக காணப்படுகின்றார் .

    ReplyDelete
    Replies
    1. சேகு இஸ்தலின் ஹசன் அலி பசீர் சேவூதாவுத் நசீர்அகமட் போன்றொர் வடகிழக்கு இணைவிற்கு நிபந்தனையுடன் ஆதரவாகவே உள்ளனர்.

      Delete

Powered by Blogger.