Header Ads



ரோஹின்ய முஸ்­லிம்கள் பற்றிய, உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன்?


கல்­கி­சையில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் தங்­க­வைக்­கப்பட்­டி­ருந்த குடி­யி­ருப்பை சுற்றி வளைத்து அத்துமீறல்கள் இடம்­பெ­றலாம் என தேசிய உளவுத் துறை எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தும், அவ்­வா­றான நிலை­மையை தவிர்க்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என தெரிய வரு­கின்­றது. 

கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி, பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் கல்­கி­சையில் அமைந்­துள்ள கட்­டடம் ஒன்­றினை சுற்றி வளைத்து ரோஹிங்யா அக­தி­க­ளுக்கு எதி­ராக கோஷங்­களை எழுப்­பியும் கட்­டடம் மீது தாக்­குதல் நடத்­தியும் கொலை அச்­சு­றுத்தல் விடுத்தும் அத்துமீறல்­களை புரிந்­தனர்.

எனினும் அந்த சம்­ப­வத்­துக்கு இரு நாட்­க­ளுக்கு முன்னர் இவ்­வா­றான திட்­ட­மி­ட்ட நட­வ­டிக்கை ஒன்றுக்கு  ஒரு குழு­வினர் தயா­ரா­வது குறித்து தேசிய உளவுத் துறை பாது­காப்புத்துறையை எச்­ச­ரிக்கை செய்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது. எனினும் அதனை தடுப்­ப­தற்கு பாது­க­பபு பிரிவு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை எதனையும் முன்னெடுக்காமை தொடர்பில் பாதுகாப்பு ஆய்வாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.