Header Ads



செத்த பாம்பாட்டியின் நிலையில்தான், இந்த அரசு இருக்கிறது - மகிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேய் என்று என்னை சொல்லவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, “தன்னை பலவீனப்படுத்தினால் பேய்கள் மீண்டும் தலைதூக்கும்” என்று கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்சவையே ஜனாதிபதி பேயுடன் ஒப்பிட்டு பேசியதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தன. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வினவியது,

இதற்கு பதிலளித்து பேசிய அவர், “இந்த அரசு கிட்டத்தட்ட பாம்பு செத்த பாம்பாட்டியின் நிலையில் தான் இருக்கிறது. மக்களின் ஆதரவு இவர்களுக்கு இல்லை. ஜனாதிபதிக்கு வாக்களித்த தமிழ் மக்களே அவரை வெறுக்கின்றனர்.

அவர் பேய் என்று என்னைச் சொல்லவில்லை. நாங்கள் கோபப்படும்போது நமக்குள் இருக்கும் பேயை வெளியே கொண்டுவர வேண்டாம் என்பதற்காக "மாவ யக்கா அவுசன்னெப்பா'' என்று சிங்களத்தில் சொல்வோம். 

அதனைத்தான் மைத்திரி சொல்லியுள்ளார். அதுதான் உண்மை. நன்றாக யோசித்துப் பாருங்கள், புரியும். இப்போது தேர்தல்களை ஒத்திவைப்பது யார்? பேயின் அவதாரங்களா?” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நாங்க உங்கள பேய் என்றோ பிசாசு என்றே கூறவேயில்ல. நீங்க ரெண்டு பேரும்தான் ........ ஏன் எங்கள பயப்பட வக்கயள். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப மோ....................சம்.

    ReplyDelete

Powered by Blogger.