Header Ads



"பெண்கள் அரசாங்கத்தை திட்டுகின்றனர், பிக்குகளின் கோரிக்கையை ஏற்பது அரசின் கடமை"

பௌத்த பிக்குகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

மஹா சங்கத்தினர் சொல்வதனை ஆட்சியாளர்கள் கேட்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அரசியல் கட்சிகளின் தகவல்களை வெளியிடும் போது ஊடகங்களில் அரசியல்வாதிகளின் புகைப்படங்களை பிரசுரிக்கின்றனர்.

அதேபோன்று பௌத்த பிக்குகளின் கருத்து தொடர்பிலான செய்தியில் மல்வத்து பீடாதிபதியின் புகைப்படத்தை வெளியிடுவதில் தவறில்லை என கூறியுள்ளார்.

அத்துடன், அந்தக் காலத்தில் நான் ஏதேனும் விமர்சனப்பாங்கான கருத்து வெளியிட்டால் என்னை சர்வாதிகாரி என்று கூறினார்கள்.

தற்போது வீடுகளில் உள்ள பெண்கள் அரசாங்கத்தை திட்டி தீர்க்கின்றனர். அவ்வாறானதொரு நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Totally and completely wrong opinion. Even a Buddhist monk in highest position, if he expresses anything against humanity and not practical it should be rejected. This is the difference between islam and other religions.

    ReplyDelete

Powered by Blogger.