Header Ads



அக்வினாஸ் கல்லூரியின், வருடாந்த பட்டமளிப்பு விழா


அக்வினாஸ் பல்கலைக்கழக கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழா நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அக்வினாஸ் பல்கலைக்கழக கல்லூரியின் 08ஆவது பட்டமளிப்பு விழா இதுவென்பதுடன், மனோ தத்துவவியல், தகவல் தொழினுட்பம், சமயம் தொடர்பான முதுமானி பட்டங்கள் உள்ளிட்ட 95 மாணவர்களுக்கான பட்டங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

பட்டமளிப்பை ஆரம்பித்துவைக்கும் முகமாக பட்டம் பெறும் 15 மாணவர்களுக்கான பட்டங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார்.

அக்வினாஸ் பல்கலைக்கழக நிறுவனத்தின் வேந்தர் பேராயர் மெல்கம் ரஞ்சித் காதினல், உபவேந்தர் அருட்தந்தை சுசிக் மாக் லால் சில்வா உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்கள், அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


No comments

Powered by Blogger.