Header Ads



திருமணம் செய்ய, மோடி ஒப்புக்கொள்வாரா..?

பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் அதிகமான ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச ஆர்வம் கொள்வார்கள். இதில் மோடியின் மீது அதிக பாசம் கொண்ட பெண் ஒருவர் அவரை திருமணம் செய்ய வேண்டும் என போராட்டத்தில் இறங்கி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த 40 வயதை தொட்ட ஓம் சாந்தி சர்மா, பிரதமர் மோடியைதான் திருமணம் செய்வேன் என ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறார். 

பிரதமர் மோடியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி முதல் மோடி புகைப்படம் மற்றும் வாசகம் அடங்கிய பேனருடன் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். 

சாந்தி சர்மா பேசுகையில் “எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. ஆனால், திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. நான் இப்போது தனிமையில் இருக்கிறேன். அதுபோல, மோடியும் தனிமையில் இருக்கிறார். என்னை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் என பலரும் அணுகிறார்கள், ஆனால் பிரதமர் மோடியை திருமணம் செய்துகொண்டு அவருக்கு சேவை செய்ய விரும்புகிறேன்,” என தெரிவித்தார். பிரதமர் மோடியும் தனியாக இருந்து அதிகமான வேலையை செய்து வருகிறார், அவருக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் என குறிப்பிட்டு உள்ளர். 

நீங்கள் பிரதமர் மோடியை திருமணம் செய்ய விரும்புவது ஏன்? ஏன் இங்கு அமர்ந்து போராட்டம் நடத்துகிறீர்கள்? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையில், பிரதமர் மோடியை சந்திக்க என்னை யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவருக்கு உதவி தேவைப்படும் என எனக்கு தெரியும். அவரும் என்னை போன்று தனிமையாக உள்ளார். பெரியவர்களை மதிக்க வேண்டும் என சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுத்திருக்கின்றனர். நான் மோடியை மதிக்கிறேன். என்னை மனநோயாளி என நினைத்து மற்றவர்கள் என்னை பார்த்து சிரிக்கின்றனர். ஆனால், என் மனநிலை நன்றாக உள்ளது. பணத்துக்காக நான் அவரை திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. அவருக்கு உதவி செய்யவே விரும்புகின்றேன்,” என்கிறார் சாந்தி சர்மா. 

சாந்தி சர்மாவிற்கு ஏற்கனவே 20 வயதில் மகள் உள்ளார். மகளை பற்றி சாந்தி சர்மா கவலை கொள்ளவில்லை. “எனக்கு ஜெய்பூரில் அதிகமான இடம் மற்றும் பணம் உள்ளது. பிரதமர் மோடிக்கு பரிசு வழங்க அவற்றை விற்பனை செய்யவும் திட்டமிட்டு உள்ளேன். பிரதமர் மோடி இங்கு வந்து என்னை சந்திக்கும் வரையில் போராட்டம் தொடரும்,” என்று கூறிஉள்ளார் சாந்தி சர்மா. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவினால் சாந்தி சர்மா கவலை கொண்டு உள்ளார். என்னை அரசு இங்கிருந்து அகற்றுமா என எனக்கு தெரியாது, போராட்டத்திற்கு இவ்விடம் மிகவும் வசதியானது என குறிப்பிடுகிறார். 

No comments

Powered by Blogger.