Header Ads



கட்டாரிலிருந்து வந்ததும், முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி வழங்கிய பரிசு

கட்டாரிலிருந்து வந்ததும் முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி பரிசளித்துள்ளதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் ஊடக செயலாளர் அஸாப் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கட்டார் நாட்டில் இருந்து நேற்று இலங்கைக்கு மீள திரும்பியிருந்தார்.இன்று அவரது ஊடக பிரிவானது கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் அனுமதியை தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிப்பால சிறி சேனா ஜனாதிபதியாவதற்கு முன்பே மாடுகளை பொலனறுவையில் இருந்து ஏற்றிச் செல்வதை தடுத்த கதைகளும் பரவலாகவே உள்ளன.அன்றே தடுத்தவருக்கு இன்று தடுப்பதொன்றும் பெரிய விடயமல்ல.

அதிகமாக முஸ்லிம்களே மாடுகளை அறுத்துண்பதை வழக்கமாக கொண்டுள்ளதால் இவ்விடயமானது முஸ்லிம்களையே அதிகம் பாதிக்கும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. மாடு அறுத்துண்டுதான் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்றில்லை. இருந்தாலும் முஸ்லிம்களை குறி வைத்து நடக்கும் விடயங்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை பராமுகமாக இருக்கும் போது இனவாதிகளுக்கு அது உற்சாகமளிப்பதாக அமைந்துவிடும்.

முஸ்லிம்களின் மத கடமைகளான அகீகா, உழ்கிய்யா போன்ற விடயங்களின் போது மாடு அறுக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கையில் உள்ள அதிகமான இடங்களுக்கு அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை போன்ற இடங்களில் இருந்தே மாடுகள் அறுவைக்காக வருகின்றன. இச் சட்டம் அமுலில் வருகின்ற போது இலங்கையில் உள்ள அதிகமான பிரதேசங்களில் மாடு அறுப்பது குறைவடையும். இச் சட்டம் மறுவடிவமானது, ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன மாடு அறுப்பை தடை செய்துள்ளார் என்பதாகும். இச் சட்டம் முஸ்லிம்களை நேரடியாக பாதிக்கும்.

கட்டார் நாட்டில் இருந்து வந்ததும் முஸ்லிம்களுக்கு எதிரான இவ்விடயத்தை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறி சேனா செய்திருப்பதானது, முஸ்லிம் நாடான கட்டார் நாட்டை நோக்கி அவர் சென்ற நோக்கம் நிறைவேறாததால் முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்குடனும் இருக்கலாம். உடனடியாக இச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறி சேனா வாபஸ் பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

18 comments:

  1. இவனொரு மனநோயாளி சொல்லிவேலையில்லை இவண்டே ஆட்சியும் நாட்டின் தலைமைத்துவமும்.

    ReplyDelete
  2. இது என்ன வேடிக்கை. இருக்கு இன்னும் நிறையப்பரிசு. இவருக்கு vote போட்ட எமது கைகளை முதுகுக்குப்பின்னால் வைத்து கட்டிவிடுவோம். கைகளை வெட்டி வீசவேண்டாம். ஏனெனில் இவருக்கு எதிராக எமது vote ஐ பிரயோகிக்க கைகள் தேவைப்படும்.

    ReplyDelete
  3. கட்டாயக் கடமை ஒன்றை தடை செய்ததைப் போல கூறுகின்றீர்கள். நாம் நுகர்வோர்களே. தடை செய்தால் பாதிக்கப் படப்போவது நாமல்ல.

    ReplyDelete
  4. Why do look at it in a communal perspective and connect it with his visit to Qatar. In my view you are trying to put this on to the Muslim shoulders whereas its only a matter of transporting animals. Let us clearly understand that transporting animals does not have anything to do with Uluhiyya. Here you cant eat meat everyday which is so much good for your health

    ReplyDelete
  5. it is a joke. This decision imposed blockade to some people food. It like food embargo.
    Anyway at least take a decision to bring food prices down, I heard in UK you can buy a 800g brad for the price of Rs 100.00. Also if a person works for 1 hour it will enough for him to buy food for a day. I am telling this with full knowledge.

    ReplyDelete
  6. MAATAI THINDU THINDU THAAN MAATAI POAAL AAGHI WITTOMO???

    ReplyDelete
    Replies
    1. அனேகர் அளவாக மாட்டை உண்டு பொறுப்போடு கருத்துப்பதிவிடுகிண்றனர், உம்போண்ற சிலர் கொழுப்பெடுத்த என்ன எளுதுகிறோமென்பதை யோசிக்காத மாடுகளாய் உள்ளனர். நீர் மாடு என்பதற்காக மற்றவரையும் இணைக்க முயலாதீர்

      Delete
  7. முஸ்லிம்கள் செய்த மிகப்பெரிய தவறு இந்த இனவாத பேயை ஜனாதிபதியாக்க வாக்கு பிச்சையளித்தது. இப்போது அனுபவிக்க தான் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நமக்கு வேறு வழியுமில்லை, 2இல் 1க்குதான் போடவேண்டும் எண்றநியதியை மாற்றமுடியாது, ஆனால் பாராளுமண்ற தேர்தலில் நம் ஒற்றுமயை காட்டி நல்ல முஸ்லீம் அமைச்சர்களை உருவாக்கமுடியும், انشا الله...

      Delete
  8. Dear Friends,

    Before we write any comments that we have to do it with sense. The background of suspending the transporting of animals temporarily is that those vehicles used for transporting of animals specially cattles meet with accidents very often causing heavy damage including to human lives. For example take the Anuradhapura incidents. It reveals that two twin graduate girls were killed yesterday by a lorry which was transporting cattles.

    Let me explain how it is happening. Mostly cattle are transported without following the rules and regulations and therefore to escape from the law vehicles are driven recklessly resulting accidents causing unrecoverable damages.

    I feel hearing the yesterday's incident the President might have ordered for suspending the transporting of animals in order to regularise the transport of cattles/animals

    Therefore I kindly request to avoid in making allegation without knowing the root cause.

    ReplyDelete
  9. If the Passenger Bus met with a similar accident, will he ban the Bus transporting passengers. Yahapalanya Jayaweva????

    ReplyDelete
    Replies
    1. It is very easy to talk while sitting in the opposition. However we have to understand the reality and it is not a must for us to eat beef and unnecessarily get fear that there will be scarcity for food if we stop eating beef. The Almighty Allah (SWT) has clearly said in the Holy Quran that it is his responsibility to give all the needs including shelter and food for all of his creations. Please note that there has been a rift between the communities livin in Sri Lanka on this issue and therefore it has to be handled diplomatically to solve this problem.

      Delete
  10. I think The people in charge of issuing licenses need more training and Officers who take bribes to illegal activities must punish for this not ordinary people

    ReplyDelete
  11. யானையை கொண்டு செல்லலாம்..... Good governments????????????????

    ReplyDelete
  12. yes you are correct mr. seeni mohamed.it happened right after the accident which cause to death of two gratuates kill by a lorry which is transporting cattles illeagaly .i mean without permit.

    ReplyDelete
  13. பரிசு பெரிய ஆப்பு

    ReplyDelete
  14. this government what has done to who live in all life in Qatar Or Saudi Mr. Mahinda start some plane for us like vehicle permit and tax free etc... but this govt. stop those and doing like bugs waste waste

    ReplyDelete
  15. I think without we are exactly knowing the purpose of the act, better not to connect it to his visit to Qatar and gift to Muslims. Sometimes another reason would be there behind it, like death of two sisters.
    I think we better change our mentality first, always we used to see everything racially.
    Why don't we see the matters positively?

    (Fazil - from Doha)

    ReplyDelete

Powered by Blogger.