Header Ads



2025 வரையும் ஆட்­சியை கொண்டு செல்வோம் - கபீர் ஹாஷிம்

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் நாடு­பூ­ரா­கவும் உள்ள தேர்தல் தொகு­தி­களில் 75 சத­வீ­த­மான தொகு­தி­களை ஐக்­கிய தேசிய முன்­னணி கைப்­பற்றும் என்­ப­தனை தம­து­கட்சி கணக்­கிட்­டுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

அத்­துடன் வேட்­பா­ளர்­களை  தெரிவு செய்­வ­தற்­கான இறுதி தீர்­மானம் எடுப்­ப­தற்கு­ பி­ர­தமர் தலை­மையில் வேட்பு மனு குழு­வொன்று நிய­மிக்­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்கு தற்­போது நாம் தயா­ராகி வரு­கின்றோம். இதன்­படி மாவட்ட அடிப்­ப­டையில் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்கு மாவட்­டங்கள் வாயி­லாக சிறி­கொத்தா வேட்­பாளர் தெரி­வு­க்குழு பய­ணித்த வண்ணம் உள்­ளது. இந்த வாரம் அநு­ரா­த­புரம், பொல­ன­றுவை மாவட்­டங்­க­ளுக்கு தெரி­வுக்­குழு பய­ணிக்­க­வுள்­ளது. அதே­போன்று ஏனைய அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் பய­ணித்து வேட்­பா­ளர்­களை தெரிவு செய்ய திட்­ட­மிட்­டுள்ளோம்.

ஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பா­ளர்கள் தெரிவில் கிரா­மத்தில் உள்ள பிர­ப­லங்­களை கள­மி­றக்க திட்­ட­மிட்­டுள்ளோம்.  இதன்­படி சிறி­கொத்தா தெரி­வு­க் கு­ழு­வினால் தயார் செய்யும் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்­கான இறுதி தீர்­மானம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நிய­மிக்கும் குழு­வினால் எடுக்­கப்­படும். விரைவில் குறித்த குழு நிய­மனம் செய்­யப்­படும்.

இந்­நி­லையில் தற்­போது கட்­சி­யினால் கணக்­கீடு ஒன்று செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த கணக்கின்படி நாடு­பூ­ரா­கவும் உள்ள தேர்தல் தொகு­தி­களில் 75 சத­வீ­த­மான தொகு­தி­களை ஐக்­கிய தேசிய முன்­னணி கைப்­பற்றும். அத்­துடன் தற்­போது இந்த ஆட்­சியின் மீது ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே நம்­பிக்கை இழந்­தது போல் செயற்­ப­டு­கின்­றனர். இரு வரு­டங்­களில் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று அஞ்­சு­கின்­றனர். 

எனினும் நான் ஒன்றை கூற விரும்­பு­கின்றேன். நாம் இரு வரு­டங்­க­ளுக்கு ஆட்சி செய்ய வர­வில்லை. இம்முறை அது நடக்­காது. 2020 ஆம் ஆண்டு ஆட்சி முடித்­துக்­கொண்டு விடாமல் 2025 வரையும் ஆட்­சியை கொண்டு செல்வோம். அது­மட்­டு­மல்­லாமல் 2025 ஆம் ஆண்­டுக்கு அப்­பாலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சியை கொண்டு செல்வோம்.

இவ்வருடத்தில் விசேட போயா தினமொன்றை உருவாக்குவதன் ஊடாக மாத்திரமே கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆட்சியை கவிழ்க்க முடியும். ஏனெனில் இவ்வருடத்தில் அவர்கள் கூறிய போயா தினம் முடிவடைந்து விட்டது என்றார்.

5 comments:

  1. This is rubbish. If this is true, why are you postponing provincial elections.

    ReplyDelete
  2. conduct the elections and see.

    ReplyDelete
  3. சமூகத்தின் எந்த நலவு பற்றியும் அக்கறை இல்லாத நீங்கள் எத்தனை வருடம் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன சார்

    ReplyDelete
  4. Unnai naam muthalil irakki viduvom.

    ReplyDelete

Powered by Blogger.