Header Ads



விஜயதாஸவை ISIS, இலக்கு வைத்துள்ளதை கண்டுபிடித்த சிங்கள ராவய

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் பின்னணில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இருப்பதாக சிங்கள ராவய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதத்த தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "

நீதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதன் பின்னணி தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்த்தோம்.

அந்த வகையில், ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையில் இருப்பதாகவும், நாட்டில் சில முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் இருப்பதாகவும் நீதியமைச்சர் அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அவ்வாறு கருத்து தெரிவித்ததன் பலனாகவே அவருக்கு எதிராக அடிப்படைவாத குழுக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் சிலர், அவருக்கு எதிராக நம்பிக்யில்லா தீர்மாணத்தை கொண்டு வர முற்படுகின்றனர்"

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியானது தேசிய சிந்தனை கொண்டவர்களுக்கு இடமளிக்கும் கட்சி கிடையாது. அவ்வாறான கொள்கையினை உடையவர்களுக்கு எதிராகவே ஐக்கிய தேசியக் கட்சி இருக்கின்றது.

ஆகையினால்தான் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முற்படுவதாக" மாகல் கந்தே சுதத்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.