Header Ads



முஸ்லிம்களின் கடைகள் மீது தாக்குதல், எனக்கு தொடர்பில்லை - கோத்தா

பொது பலசேனா அமைப்புடனோ அல்லது அண்மையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களுடனோ தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொது பலசேனாவுடன் என்னைத் தொடர்புபடுத்தியும், அண்மையில் முஸ்லிம் வணிக நிறுவனங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபடுத்தியும் எனது பெயரைக் கெடுக்கும் வகையில், வெளியிடப்பட்டுள்ள செய்திகளைக் கண்டிக்கிறேன்.

இந்தக் குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிக்கிறேன். எனது நற்பெயரைக் கெடுப்பதற்காக மீண்டுமொருமுறை மேற்கொள்ளப்படும் முயற்சி இதுவாகும்.

இந்த சூழ்ச்சிகளின் பின்னாலுள்ள அரசியல் நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ள வேண்டும். இனநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய வெறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ச தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

3 comments:

  1. "தனக்கு இதில் சம்பந்தமில்லை" அவ்வளவும் தான்.
    தமிழ் தலைவர்கள் (சம்பந்தன்/மனோ கணேஷன்) அளவுக்கு கூட இதை கண்டிக்க மனமில்லை.

    இவர்களை ஜெனிவா வில் காப்பாற்ற நீங்கள் பட்டபாடு.

    Who cares...,அடுத்த தேர்தலில் இவர்கள் ஆட்சியை பிடித்தால் உங்கள் தலைவர்களின் மினிஸடர் பதவிகளுக்கு இவரின் கருணையும்
    வேண்டும் தானே.

    ReplyDelete
    Replies
    1. டயஸ்போறாக்களின் சூழ்ச்சிகளை நம்பி இவர்களை தோல்வியடைய நாமும் காரணமாகியிருக்கும் நிலையில் எமகாதரவான அறிக்கையை எப்படி எதிர்பார்க்கமுடியும்? அதுவும் இவரின் அறிக்கையில் ஒரு அரசியல்வாதி கூறும் சாதாரண ஆறுதலை வெளியிட்டு தானே உள்ளார்?

      "இந்த சூழ்ச்சிகளின் பின்னாலுள்ள அரசியல் நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ள வேண்டும். இனநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய வெறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்"

      Delete
  2. You started, that's all

    ReplyDelete

Powered by Blogger.