Header Ads



கட்டாருடன் உறவை, மீளாய்வுசெய்ய கோரிக்கை

கட்டாருடன், இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதாக ஐந்து மத்திய கிழக்கு நாடுகள் அறிவித்துள்ள நிலையில், சிறிலங்காவும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

கட்டாரில் அதிகளவு இலங்கைத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்ற நிலையில், இந்த நெருக்கடியால் சிறிலங்காவும் பாதிப்புகளை எதிர்நோக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கட்டாருக்கான விமான சேவைகளை பல நாடுகள் நிறுத்தியுள்ள நிலையில், நிலைமைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, சிறிலங்கன் விமானசேவை அறிவித்துள்ளது.

இதற்கிடையே,  சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள், கட்டாருடனான தொடர்புகளைத் துண்டித்துள்ள நிலையில், கட்டாருடனான இராஜதந்திர உறவுகள் தொடர்பாக சிறிலங்கா மீளாய்வு செய்ய வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.