Header Ads



முஸ்லிம் தனியார் சட்ட, குழுவுக்கு திறந்த ஒரு மடல்..!

முஸ்லிம் தனியார் சட்டம் என்ற தலைப்பில் பேசப்படுவதையும் எழுதப்படுவதையும் பார்த்து அனுதாபப்பட வேண்டியுள்ளது. ஒரு சாரார் ஷரீஅத் என்றால் என்னவென்று தெரியாமலேயே ஷரீஅத் பேசுகின்றனர். வேறு சிலர் தமது அந்திமகாலத்தில் உலமாக்களையும் ஷரீஅத்தையும் கேவலப்படுத்தி பாவத்தை சுமக்கின்றனர். வேறும் சிலர் சமூகப்பணியென்ற பெயரில் தான் கடைபிடிக்கும் வாழ்க்கைக்கேற்ப ஷரீஅத்துக்கு விளக்கம் கூற துணிந்துள்ளனர்.

தனியார் சட்ட திருத்தம் பற்றி பேசும் சிலர், தாம் பேசும் சில விடயங்களில் எந்த சம்பந்தமுமில்லாதவர்கள் போலுள்ளனர். சிறுவர் திருமணம் என்ற வசனத்தைக் கூறி ஷரீஅத்தை கேவலப்படுத்துகின்றனர். பருவம் அடைய முன்பும் அதன் பின்னரும் திருமணப் பேச்சுக்களை பெற்றோர்கள் பேசுவதில் என்ன தவறிருக்கிறது. பருவம் அடைய முன் அன்னை ஆயிஷா ரழியல்லாஹ} அன்ஹா அவர்களுக்கு திருமண பந்தம் நடந்தது. அன்னாரது 09 வயதில் தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டார்கள் என்று வரலாறு கூறுகிறது. 

பருவமடைதல் என்ற ஒரு எல்லையை ஷரீஅத் குறிப்பிட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. முஸ்லிம் தனியார் சட்டம் எழுதப்படுகின்ற போது முஸ்லிம் பெண் பிள்ளை திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்ட வயது 12 என்றிருந்தது. அது அக்கால சமூக அமைப்பை வைத்து எழுதப்பட்டதாகும். ஏதேனும் ஒரு தேவையின் நிமித்தம் அதை விட குறைந்த வயதில் திருமணம் புரிவதாயின் காழியின் விஷேட அனுமதி தேவையென்றும் சட்டம் கூறுகிறது. 

இங்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அதாவது ஷரீஅத்தில்; குறித்த பருவமடைதல் என்றொன்றும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதாகும். அடுத்து சமகால தேவைகள், நிலைமைகள், கல்வி என்பவற்றைக் கவனத்திற் கொண்டு பதினாறு வயதினை வயதெல்லையாக நிர்ணயம் செய்து கொள்வதாகும். இதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் அங்கீகரித்துள்ளதை அறிகின்றேன். இந்நிலையில் பொய்ப்பிரசாரங்களும் விமர்சனங்களும் செய்வது எவ்வளவு ஏற்புடையது என்று எம்மை சிந்திக்க வைத்துள்ளது. 

குழந்தைப் பாக்கியம் என்பது அல்லாஹ்வினால் வழங்கப்படும் நன்கொடையாகும். அல்லாஹ் நாடியவர்களுக்கு அவன் விரும்பியவன்னம் கொடுக்கின்றான். குழந்தைகளின் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றிக் கொடுப்பது பெற்றோர்களின் தார்மீகப் பொறுப்பாகும். பெண்கள் குறித்த வயதைல்லையை தாண்டும் போது அவர்களின் தோற்றம், கவர்ச்சி போன்ற விடயங்களில் மாற்றங்கள் எற்படுகின்றன. எனவே குறிப்பிட்ட கால எல்லைக்குள் திருமணம் முடித்துக்கொடுக்க தவரும் பட்ச்சத்தில் அவர்களின் வாழ்க்கை கேல்விக்குறியாகிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. எத்தனை முதிர்கண்ணிகள் எமது வீடுகளில் திருமணமாகாத நிலையில் காலத்தை தள்ளுகிறார்கள் என்று மாதர் சங்கங்கள் சிந்திக்கவில்லையா? Nபுழு க்களின் தகவல்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் குழுத் தலைவர் அதே பெண் குழுக்களை அனுப்பி திருமண வயதை அடைந்தும் அந்தப் பாக்கியம் கிடைக்காது வீடுகளில் முடங்கி உள்ளவர்கள் எத்தனை பேர் என்று ஒரு கணக்கெடுப்பை செய்து பார்க்கட்டும். அநியாயமாக ஷரீஅத் சட்டங்களை மாற்றுவதற்கு செலவழிக்கப்படும் பணங்கள் ஏழைக் குமர்களின் விடயங்களில் செலவழிக்கப்படட்டுமே!

அடுத்து பெண்களில் திறமைசாலிகள் இருக்கிறார்கள். வைத்தியர்கள், விஞ்ஞானிகள், பல்துறை சார்ந்தோர், விமானமோட்டிகள், மற்றும் இன்னோரன்ன துறைகளில் உயர்வடைந்தவர்கள் இருக்கின்றார்கள். இது எல்லாவற்றை விடவும் ஹதீஸ் துறை வல்லுனர்கள் முஹத்திஸ்கள் எனப்படும் ஹதீஸ் துறை அறிஞர்கள் முபஸ்ஸிரீன்கள் இன்னும் பல திறமைசாலிகள் முஸ்லிம் உம்மத்திலே உள்ளனர். இஸ்லாமிய துறையில் குர்ஆன் ஸுன்னாவில் உயர் நிலை அடைந்த பெண்கள் எவரும் தாம் காழிநீதிபதியாக வர வேண்டும் என எதிர்பார்க்கவோ எழுதவோ இல்லை. ஏனெனில் அது முஸ்லிம்களில் ஆண்களுக்குரியது என்று மார்க்கத்தை விளங்கி இருந்தார்கள். இந்த விளக்கம் இல்லாததனால் தான் பெண்கள் தாமும் காழியாக வர வேண்டும் என்று துடிக்கின்றார்கள்.  

குறிப்பாக தற்போது எழுப்பப்படும் விமர்சனங்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவரை மாத்திரம் குறிவைத்து எழுதப்படுகின்றன. இவ்வாறு இருக்கும் போது ஏன் முஸ்லிம் தனியார் சட்டக் குழு அமைதியை கையாழுகின்றது. இது முஸ்லிம் சமூகத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது. ஏனைய குழு உறுப்பினர்கள் ஷரீஅத் விடயங்களில் மாற்றங்கள் வருவதற்கு உடந்தையாகக் கூடியவர்களா? மேற்கத்தைய Nபுழு க்களின் பிச்சைகளைப் பெற்று இயங்கும் மாதர் குழுக்களின் பணத்திற்கு அடிமைப்படுகின்றார்களா? ஏன் குழுத் தலைவர் இது விடயத்தில் இன்னும் மௌனம் சாதிக்கின்றார்? 

-அர்ஹம் அப்துல்லாஹ்-

11 comments:

  1. unmayaik koori ulleerkal.allah unkalukku natkooliyaith tharuvaanaaha.

    ReplyDelete
  2. அல்லாஹ்வுக்காக இந்த அறிவுபூர்வமற்ற பேச்சுக்களை நிறுத்துங்கள். ஏற்கனவே முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள், அறிவற்றவர்கள், மதவெறியர்கள், பெண்கள் சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்பவர்கள் என்று கெட்ட பெயர் இருக்கும் பொழுது, அறிவியல், நாகரீகம் ஆகியவற்றில் முன்னேறுவது குறித்துக் கவனம் செலுத்தாமல், மீண்டும், மீண்டும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் மடத்தனத்தை செய்ய வேண்டாம்.

    ReplyDelete
  3. நாகரீகமாக எழுதுவது போன்று தோற்றத்துடன் எழுதி இருந்தாலும், கட்டுரை பழைய குப்பைக்கு புதிய பெயின்ட் அடிக்கும் வேலையை செய்துள்ளது.

    ஒரு தவறுக்கு வேறு நியாயங்களைக் கூறாமல், உண்மையை ஏற்றுக் கொண்டு, தேவையான மாற்றங்களைக் கொண்டு வரவே வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அம்ஜி!!

      நீங்கள் ஒரு முஸ்லிம்.

      ஷரீஅத் பழைய குப்பையில்லை!

      புது சாயம் தேவையுமில்லை!

      நீங்கள் ஒரு முஸ்லிம் என்று மறக்காதீர்கள்.

      மார்கத்தை மனோ இச்சைபடி மாற்ற முயற்சிக்காதீர்.!

      தண்டனை கடுமையானது.

      Delete
  4. Arham Abdullah avarkale thodarnthu eluthunkal.

    ReplyDelete
  5. MASHAALLAH valuable article
    Expecting more like this.

    ReplyDelete
  6. Quote “இங்கு நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதாவது ஷரீஅத்தில்; குறித்த பருவமடைதல் என்றொன்றும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதாகும். அடுத்து சமகால தேவைகள், நிலைமைகள், கல்வி என்பவற்றை கவனத்தில்கொண்டு ௧௬ வயதினை வயதெல்லையாக நிர்ணயம் செய்து கொள்வதாகும்." Unquote


    இது ஷரீஅத்திற்கு ஏற்புடையதா?
    அல்லாஹ் விதித்ததை எம்மால் மாற்ற முடியுமா?
    அறிந்தவர்கள் தயைகூர்ந்து தெளிவு படுத்துங்கள்.

    ReplyDelete
  7. Jazakumullahu jihad to the article

    ReplyDelete
  8. Well, I have two questions.

    01. Eg. I am 50 years old and do anyone in you wish to marry your 12 year sister to me please ???

    02. Has the Sharia law never changed? During Adam (Alai) era one could marry their own sister? Can this be applied now. Has this not been changed? Why few of you are so adamant on the practices without looking at the Islamic Principles?

    Islam is cleansing yourself before looking at others. If you are moderate enough to understand that a 12 year girl has to study at least O/l's to teach her own kids you or me will not be wasting our time on these silly topics. Grow up.

    ReplyDelete

Powered by Blogger.