Header Ads



யாழ்ப்பாண பள்ளிவாசல்களை, பாதுகாக்க முன்வருமாறு வேண்டுகோள்


1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் உடமைகள் பணம் நகை எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டவர்களாக வெளியேற்றப்பட்டதை நாம் அறிவோம். 2009 இல் யுத்தம் முடிவமைந்த பின்னர் இவர்கள் யாழ் சென்று பார்த்த போது வீடுகள் எல்லாம் உடைக்கப்பட்டும் பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டும் காணப்பட்டது. 

சென்றவர்களில் பலர் திரும்பிவர சிலர் எதிர் நீச்சல் போட்டு யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறியுள்ளனர். யாழ் மாவட்டத்திலுள்ள 18 பள்ளிவாசல்களையும் பராமரிக்கவும், பாதுகாக்கவும் தற்போது குடியேறியுள்ள மக்களின் தொகை போதாது. 

ஆனால் புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் நூற்றக்கணக்கான குடுமபங்கள் மீளவும் சென்று யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்தக் காணிகள் இல்லை. ஆனால் காணி வாங்கி அதில் வீடுகள் கட்டித்தரப்படுமிடத்து அவர்கள் குடியேறத் தயாராகவுள்ளார்கள். 

ஓவ்வொரு பள்ளிவாசலைச் சூழவும் ஆகக்குறைந்தது பத்து குடும்பங்களையாவது குடியேற்ற வேண்டியது முஸ்லிம்களாகிய எமது கடமையாகும். 

சோனகர் பிரதேசத்தில் 6 பேர்சஸ் காணியின் விலை 10 இலட்சங்களாகும். அதில் சிறிய வீடொன்றை அமைக்க 8 இலட்சம் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

இதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். யாழ் முஸ்லிம் இணையத்தளம் இதற்கு அனுசரனையாளராக செயற்படும். 

எனவே இம்முறை ரமலானிலோ அதற்குப் பின்போ சகாத் கொடுக்க நிய்யத்து வைத்திருப்போர் அதில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்குமாறு வேண்டுகின்றோம். 

இதுபற்றிய மேலதிக தகவல்கள் வெகுவிரைவில் தரப்படும். 

No comments

Powered by Blogger.