விலங்கு எப்படி, மனிதனுக்கு தாயாக முடியும்? நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி
பால் கொடுக்கும் பசு மனிதர்களுக்கு தாய் போன்றது என பா.ஜ.க.வினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், மனிதர்களுக்கு விலங்கு எப்படி தாயாக முடியும்? என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்சு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஆடு, எருது, ஒட்டகம் கூட நமக்கு பால் தருகிறது. அவைகளும் நமக்கு தாய் தானா?” எனவும் கேட்டுள்ளார்.
நாட்டில் சர்ச்சையான நிகழ்வுகள் ஏதும் நடைபெறும் போது மார்கண்டேய கட்ஜு கருத்து கூறி அந்நிகழ்வை மேலும் பரபரப்பாக்குவார். சில நாட்களுக்கு முன்னர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தது குறித்து பதிவு செய்து இணையதளத்தை சூடாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் முடியாது மைலா்டு!
ReplyDeleteஇலங்கையில் சிங்கள மூலபிதா மிஸ்டர் சிங்கம் அவர்கள் ஒரு விலங்கு தந்தையாக இருக்கமுடியுமென்றால்/?