நான் மக்களுக்காக போராடுறேன், ஹக்கீம் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் - ரிசாத்
-விடிவெள்ளி-
முஸ்லிம்கள் வில்பத்துவை ஆக்கிரமிக்கவில்லை என்பதை ஹக்கீம் பகிரங்கமாகச் சொல்ல வேண்டும்.
சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒன்றிணைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ள காடுபேணும் கட்டளைச் சட்டத்தின் கீழான வன பிரகடன வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னையோ எனது கட்சியையோ விமர்சித்துக் கொண்டிருப்பதால் பயன் எதுவும் ஏற்பட போவதில்லை. இவ்வாறான விமர்சனங்கள் சமூகத்தைக் காட்டிக் கொடுப்பனவாகவே அமையும்.
வில்பத்து விவகாரம் மாத்திரமல்ல, அரசியலமைப்பு விவகாரம், தேர்தல் முறையில் மாற்றங்கள் தொடர்பிலும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வேறுபடாது ஒருமித்துப் பயணிக்க வேண்டியுள்ளது.
எமது கொள்கைகள் வேறுபட்டனவையாக இருந்தாலும் சமூகத்தின் பொதுவான விடயங்களில் நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இதற்காக நான் அமைச்சர் ஹக்கீமுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
பள்ளிவாசல்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகள் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மூன்று வருடமாக மூடப்பட்டுக் கிடக்கின்றது.
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தீர்வின்றி தொடர்கிறது. இவ்வாறான பிரச்சினைகளை நாம் ஒன்றுபடுவதன் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும்.
வில்பத்து விவகாரத்தில் நான் 4 வருடங்களாக தொடர்ந்து மக்களுக்காக போராடி வருகிறேன் என்றார்.

அவர் எதற்கு வாய் திறக்கணும். அவருர்தான் சமூகம் பற்றிய அக்கரையற்றவர். இது எங்கட சமூகத்துக்கு விளங்குதில்லியே.
ReplyDeleteஅவர் எந்த நாட்டுக்கு அரச பிரதிநிதியாக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அந்த நாட்டில் ஜனாதிபதியையும் பிரதமரையும் புகழ் பாடிக்கொண்டு இருக்கிறாரோ தெரியவில்லை,
ReplyDeleteHe's a curse to our Muslim...our Muslims also foolish...still keeping him in a leaders position...it's a time to reconstruct Muslim congress...Mr.Rishad al Sri Lankan Muslims know abt u r courage for fighting for Muslims rights in Sri Lanka...as a suggestion better we have to inform to Muslim country Embassies in Sri Lanka regarding Muslim hated activities By Buddhist monks...
ReplyDelete