முடிவுக்கு வந்தது 33 வருட சகாப்தம்..!
`தி அண்டர்டேக்கர்', உலகெங்கிலும் உள்ள ரெஸ்ட்லிங் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கும் பெயர். அதை செய்ய கிட்டதட்ட 33 ஆண்டுகள் உதிரம் சிந்தி, எலும்புகள் நொறுங்க, சதை கிழிந்து சண்டை போடவேண்டியிருந்தது மார்க் காலவேவுக்கு.
அண்டர்டேக்கர் பாலுடன்
1965 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வசித்துவந்த ஃபிரான்ட் காம்ப்டன் காலவேவுக்கு ஐந்தாவது ஆண் குழந்தையாக பிறந்தான் மார்க் காலவே. சிறுவயதில் இருந்தே விளையாடுவதில் அவனுக்கு பெரிதளவில் ஆர்வம் இருந்தது. கடைக்குட்டி மார்க் காலவேவுக்கு தனது நான்கு அண்ணன்களுடன் இணைந்து விளையாடுவது தான் ஒரே பொழுதுபோக்கு. தனது பள்ளியின் கால்பந்து மற்றும் கூடைப்பந்து அணிகளிலும் நட்சத்திர ஆட்டக்காரனாக வலம் வந்தான். ஆறே முக்கால் அடி உயரமும் ஒல்லியான தேகமும் கூடைபந்து விளையாட்டில் பெரும் பக்கபலமாய் அமைய, நிறைய விளையாடி, நிறைய வென்றான்.
அந்த தகுதி, ஏஞ்சலினா கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும் வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தது. அங்கு படித்து பட்டம் பெற்ற பின்னர் டெக்சாஸ் வெஸ்லியான் பல்கலைகழகத்தில் விளையாட்டுத் துறை சம்பந்தமாக சில காலம் படித்தான். அந்த சமயத்தில்தான் மார்க் காலவேவுக்கு மல்யுத்தம் மீது ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்தது. நாளடைவில், கூடைப்பந்து விளையாட்டையே மறந்துபோய், 'மல்யுத்தம் தான் வாழ்க்கை' என மாறினான்.
தொழில்முறை ரெஸ்ட்லிங் போட்டிகளில் அண்டர்டேக்கர் அளவு நுட்பம் மற்றும் திறனோடு சண்டையிடும் ஆளே கிடையாது. வெவ்வெறு அவதாரங்கள், ஓட்டி வந்த புல்லட்டுகள், சண்டை நுணுக்கங்கள்,பட்டப்பெயர்கள், கேன் உடனான ஆன் ஸ்கிரின் உறவு என அண்டர்டேக்கரை பற்றி பேச எத்தனையோ இருக்கிறது. இப்படி பல எட்டமுடியாத சாதனைகளைப் புரிந்து, தொழில்முறை மல்யுத்த அரங்கில் மகுடம் சூடா மன்னனாக வலம் வந்த அண்டர்டேக்கர் நேற்றிலிருந்து வரலாறு ஆகிவிட்டார்.
மார்க் காலவே தனது `அண்டர்டேக்கர்' அடையாளத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டார். வயதில் அரை சதத்தை கடந்துவிட்ட மார்க் காலவே ரெஸ்ட்லிங் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டார். ரெஸ்டில்மேனியா போட்டிகளின் 21 வருடங்களாக 21-0 என விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டு வந்த அண்டர்டேக்கர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராக் லெஸ்னரிடம் தோல்வியடைந்தபோதே அவரது ரசிகர்கள் உடைந்துபோய்விட்டனர். மேலும், முதுமையால் தளர்ந்த உடல், சுருங்கிய தோல்களோடு அண்டர்டேக்கர் சண்டையிடுவதை பார்க்க அவர்களுக்கு மனமில்லை. அப்போதே ஓய்வை அறிவித்துவிடுவார் என எதிர்பார்த்தனர். எனவே, அவர்களுக்கு இந்த ஓய்வு அறிவிப்பு நிம்மதியைத் தான் தந்திருக்கும். ஆனால், அடுத்த தலைமுறை ரெஸ்ட்லிங் ரசிகர்கள் நிச்சயமாக ஒரு மாவீரனை இழந்திருக்கிறார்கள்.

இந்த வகை ரெஸ்லிங் ஒரு நடிப்பு, உண்மையான மல்யுத்தம் அல்ல. உண்மையான போட்டியில் நடுவரை தாக்க முடியாது. ஆனால் இந்த ரெஸ்லிங் போட்டிகளில் அடிக்கடி நடுவர்கள் தாக்கப் படுவதாக காட்டுவார்கள். எல்லாம் நடிப்பு.
ReplyDeleteமைக் டைசன், முஹம்மது அலி, லெனாக்ஸ் லூவிஸ் போன்ற உண்மையான குத்து சண்டை வீரர்கள் வாழ்நாளிலேயே 50 போட்டிகளில் போட்டி இட்டு இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த ரெஸ்லிங் காரர்கள் வருடத்திற்கு 50 போட்டிகளுக்கு மேல் பங்குபற்றுவதாக காட்டுகின்றார்கள். மற்றது குத்துச் சண்டை வீரர்கள் யாருக்காவது நடுவரை தாக்க முடியுமா? அப்படி தாக்கினால் ஆயுள் தடை விதிக்கப்படும். ஆனால் ரெஸ்லிங் இல் நடுவரை தாக்குவதும், வெளியில் நிற்பவர் களவாக உள்ளே வந்து அடிப்பதும் அடிக்கடி நடக்கும். இது நடிப்பு என்பனாலெயே அப்படி முடிகின்றது.
ReplyDeleteஎப்பொழுதாவது சர்வதேச தொலைக்காட்சிகளில் (CNN, BBC, France24, AlJazeera) அவர்களது விளையாட்டுச் செய்திகளில் இந்த ரெஸ்லிங் குறித்து செய்தி காட்டி இருக்கின்றார்களா?
ReplyDeleteஇது வெறும் பொய்யும், நடிப்பும் ஆகும். வெற்றி தோல்வி என்று உண்மையில் இல்லை, எல்லாமே நடிப்பு மட்டுமே.