Header Ads



பலஸ்தீன் நாட்டின் மருந்துகளை, இலங்கையில் பயன்படுத்த திட்டம்

பலஸ்தின் மற்றும் இலங்கைக்கு இடையில் மருந்து இறக்குமதி சம்பந்தமான உடன்படிக்கையில் கையெழுத்திட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 

பலஸ்தீனின் அசியா, அபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா வலயங்களுக்கான ஒத்துழைப்பு அமைச்சர் மசேன் சாமயாஹ் உள்ளிட்ட பலஸ்தீன் நாட்டின் பிரதிநிதிகள் குழு நேற்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவை சந்தித்த போது குறித்த உடன்படிக்கை தொடர்பில் பேசப்பட்டுள்ளது. 

பலஸ்தீன் நாட்டின் மருந்து தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற மருந்துகள் ஐக்கிய அமெரிக்காவினாலும் எற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பலஸ்தீன் பிரதிநிதிகள் இதன்போது கூறியுள்ளனர். 

குறித்த மருந்து தயாரிப்புகள் குறித்து தேடிப் பார்ப்பதற்காக பலஸ்தீனுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 

No comments

Powered by Blogger.