அக்கரைப்பற்றில் சவூதி அரேபியாவின் வீடுகள் - அடுத்தவாரம் முக்கிய தீர்மானம்
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரேபிய “வரத்” அமைப்பின் நிதியுதவியுடன் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்டுக் கிடக்கும் வீடுகளை மீண்டும் பயனாளிகளுக்கு கையளிக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் தொடர்பில் அடுத்த அமைச்சரவையில் இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். நேற்று (04) அமைச்சரவை கூடிய போது இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் சுற்றுச்சூழல் அறிக்கையின் காலதாமதம் காரணமாக அடுத்த அமைச்சரவையில் இதற்கான இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை 2016.08.02 ஜனாதிபதி தலைமையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டத்தில் 500 வீடுகளையும் விநியோகிப்பதெனவும் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 303 பயனாளிகளுக்கு அவற்றை ஒதுக்குவதுடன் எஞ்சிய 197 வீடுகளை சிங்கள மற்றும் தமிழ் குடும்பங்களை உள்ளடக்கிய வகையில் பயனாளிகைத் தெரிவு செய்வதெனவும் முடிவெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென சவூதி அரேபிய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட இந்த வீடுகள் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இற்றை வரை இந்த வீடுகள் கையளிக்கப்படாது இழுபறி நிலையில் இருந்ததாலேயே அமைச்சரவைக்கு இந்தப்பத்திரத்தை அமைச்சர் ரிஷாட் சமர்ப்பித்திருந்தார்.
இந்த மாவட்டத்தில் வசிக்கின்ற சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களினதும் மற்றும் இந்த மாவட்டதிலுள்ள அரச நிறுவனத்தலைவர்களினதும் பங்குபற்றலுடன் 2016.01.11 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மேற்குறித்த வீடமைப்புத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் அந்த வசிக்கின்ற மூவின மக்கள் மத்தியிலும் விகிதாசார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டுமென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் பல வருடங்களாக இந்த வீடுகள் கையளிக்கப்படாது மூடப்பட்டுக் கிடந்ததால் இந்த வீடுகள் உருக்குலைந்து காணப்படுகின்றன. அமைச்சர் சவூதி அரேபியாவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்த சவூதி அரேபிய “வராத்” நிறுவனத்துடன் பேச்சு நடாத்தியதை அடுத்து, குறித்த வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தால் புனரமைத்து நவீன வீடுகளாக மாற்றித் தருவதாக உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சரவை விஞ்ஞாபன இலக்கம் 2017/08 என்ற இது தொடர்பான பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

சுனாமி முஸ்லிம், சிங்களம் என்று மதரீதியாக பார்த்துத் தாக்கவில்லை, ஆகவே சவூதி அரேபிய உதவி இலங்கை மக்களை இலக்கு வைத்து வழங்கப் பட்டு இருக்க வேண்டுமே தவிர, முஸ்லிம்களுக்கு மட்டும் என்று தனியாக கொடுப்பது இலங்கை போன்ற ஒரு நாட்டிற்குப் பொருத்தமில்லை.
ReplyDeleteநோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு என்று அனுப்பப்படும் பேரீத்தம் பழங்களை அன்னியவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று இனத்துவேசம் பேசும் செயல் கூட முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஆபத்து, வியாபாரப் பகிஸ்கரிப்பு என்று வரும்பொழுது மட்டும் "நாம் இலங்கையர்" என்று ஒற்றுமை பேச முற்படுவது பயன்தரப் போவதில்லை.
1. Saudi Arabia didn't do this help for only muslims....
ReplyDelete2. Rishad....pics agin..here so he is the only one trying to solve this problem...? big joke