ஜனாதிபதிக்கு நெஞ்சை நிமிர்த்தி, சவால்விட்ட றிசாத் பதியுதீன் எங்கே..?
(றியாத் ஏ. மஜீத் )
கட்சிக்கு சவால்கள் வருகின்ற போதெல்லாம் கோடாரிக் காம்புகளுக்கு பதில் சொல்கின்ற முதல் மண்ணாக எப்பொழுதும் கல்முனைத் தொகுதி மண் இருந்திருக்கின்றது. சகேதரர் றிசாத், அதாவுள்ளா அல்லது பசீர் சேகுதாவுத் யார் வந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் கட்சியை பலவீனப்படுத்த முடியாது. இவர்களை நம்பி இம்மாவட்ட மக்கள் பின்னால் செல்லமாட்டார்கள் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எச்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின் ஏற்பாட்டில் மண்ணெல்லாம் மரத்தின் வேர்களால் அபிவிருத்தி பணிகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வும் மாபெரும் பொதுக்கூட்டமும் வெள்ளிக்கிழமை (31) கல்முனைத் தொகுதி சாய்ந்தமருது, மருதமுனை, கல்முனை, சேனைக்குடியிருப்பு பிரதேசங்களில் கோலாகலமாக இடம்பெற்றது. பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மறைந்த தலைவர் அஷ்ரஃப் பிரகடனப்படுத்திய காலம் முதல் கல்முனைத் தொகுதி அதன் கோட்டையாக காணப்படுகிறது. இக்கட்சியின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் மறைந்த தலைவர் கூறியதாவது அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு என்பவற்றை தரமாட்டேன் ஆனால் முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க போராடுவோம். இதற்காக தமது உயிர்களை தியாகம் செய்வதற்கும் தயாராகி இக்கட்சியில் இணைய வேண்டும் என்று கூறினார். அன்று முஸ்லிம் பிரதேசம் பாதுகாப்பற்று, உரிமைமைகளை இழந்து, வாடி வதங்கிய சூழலில் அவருடைய பேச்சின் உத்வேகம் இரவோடு இரவாக, ஒரே நாளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக கல்முனை மாறியது. அன்று முதல் இன்றுவரை இக்கோட்டையை யாராலும் தகர்க்க முடியாமல் உள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு மாற்று அரசியல் செய்தவர்கள் பலபேர் இக்கட்சியை உடைத்து இம்மண்ணில் பலவீனப்படுத்த வேண்டுமென்று முற்பட்டபோதெல்லாம் அவற்றை கல்முனைத் தொகுதி மக்கள் முறியடித்தனர். குறிப்பாக றவூப் ஹக்கீம் தலைமையேற்ற தினத்திலிருந்து இக்கட்சியினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்பட்ட அத்தனை சவால்களையும் கல்முனைத் தொகுதியில் உள்ள கல்முனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, இஸ்லாமபாத், மருதமுனை போன்ற பிரதேசங்கள் முறியடித்து மிகப் பெரிய தைரியத்தை கொடுத்து பக்க பலமாக இருந்ததை நாங்கள் மறக்க முடியாது.
அண்மைக் காலத்தில் கட்சியின் சிலரை குறிப்பாக செயலாளர் நாயகம் ஹசன் அலியை வெளியேற்றியபோது கட்சியில் என்ன நடக்குகின்றது என்று முகநூல் ஊடாக பல்வேறு கருத்துக்களும் கட்சிக்கு எதிரான பிரச்சாரங்களும் உலாவிக் கொண்டிருந்தது. கட்சியை விட்டும் வெளியேற்றப்பட்டவர்களின் உண்மை முகம் அறிந்த மக்கள் மத்தியில் இம்முகநூல் புனைகதைப் பிரச்சாரம் ஒருபோதும் வெற்றி அளிக்காது எனத் தெரிவித்தோம். அதனை நாம் கண்கூடாகவும் கண்ணுற்றோம்.
இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளம் இவர்களை நம்பி போவதற்கு தயார் இல்லை என்ற செய்தியை உறுதிப்படுத்தி விட்டார்கள். கட்சிக்கான சவால்கள் இந்த மாவட்டத்தில் இல்லை என்பதை மிக ஆணித்தரமாக கூறுகின்றேன். சகேதரர் றிசாத், அதாவுள்ளா அல்லது பசீர் சேகுதாவுத் யார் வந்தாலும் இந்த மாவட்டத்தில் இந்தக் கட்சியை பலவீனப்படுத்த முடியாது. அதற்கு இந்த மாவட்ட மக்கள் பின்னால் செல்லமாட்டார்கள் என்ற விடயம் மீண்டுமொருமுறை இன்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. கட்சிக்கு இவ்வாறான சவால்கள் வருகின்ற போதெல்லாம் கோடாரிக் காம்புக்கு பதில் சொல்கின்ற முதல் மண்ணாக எப்பொழுதும் இந்த கல்முனைத் தொகுதி மண் இருந்திருக்கின்றது.
வீராப்பு பேசுகின்ற சகோதரர் றிசாத் பதியுதீன் இன்று வில்பத்து சம்பந்தமாக அன்று தொலைக்காட்சியில் வந்து ஜனாதிபதிக்கு நெஞ்ஞை நிமிர்த்தி சவால் விட்டவர் இன்று எங்கே?. சகோதரர் ஹுனைஸ் பாறுக் கூறியதுபோன்று வில்பத்து பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கலந்து கொள்ள வேண்டும் என்று உலமா சபையிடம் மண்டியிட்டு கெஞ்சுகின்ற ஒரு கோழையாக இருக்கின்றார். இந்த நாட்டின் 20 இலட்சம் முஸ்லிம்களை தலைமை தாங்கி அவர்களின் தலை எழுத்தை தீர்மானிக்கும் தகுதி இல்லாத ஒருவர்தான் றிசாத் பதியுதீன் என்பதை இதிலிருந்து நாங்கள் புரிந்து கொள்ளலாம்.
நாங்கள் மலையாக நம்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 3 மாத்திற்குள்ளாகவே இந்த பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றி தொகுதிவாதி தேர்தல் முறையைக் கொண்டுவந்து சிறுபான்மைக் கட்சிகள் அத்தனையையும் இந்நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும் என்று முற்பட்டபோது றிசாத் பதியுதீன், மனோகணேசன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியோருக்கும் சேர்த்து தன்னந்தனியாக போராடி அந்தவிடயத்தை தடுத்து நிறுத்தி பாராளுமன்ற தேர்தல் நடைபெற வைத்தவர் எமது தலைவர் மட்டும்தான் என்பதை இந்த மக்களும் இந்த போராளிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய அரசு இவ்வாறான நிலைப்பாட்டில் இருப்பதற்கு காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் ஆகும். இவர்கள் முன்னிலையில் முஸ்லிம்களுக்கு அநீதி செய்ய முற்பட்டால் இலங்கை அரசை மட்டுமல்ல இந்திய அரசையும் சர்வதேச அரங்கு குற்றவாளி கூண்டில் நிறுத்தி வாதிட்டு தீர்ப்பை பெறுகின்ற ஒரு தகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கின்றது என்பதை இந்திய அரசு உணர்ந்திருக்கின்றது.

AALUKU AAL VEERAVASANAM
ReplyDeleteADUTHAWARAI KURAI KUURI
MEDAI AERI MULAKKAM
EWWALAWU PERIYA PAAAM.
ASHRAFF SIR INDRU IRUNTHAAL SLMC KATCHIYAI MUUDIVITTU WEEDU POI IRUPPAR.NALKAHA PURINCHUTAAAAAA???
மு. கா. முட்டாள்களின் வெடிப்பேச்சும் வெற்றுத்தலைகளின் வீரவசனமும் நல்ல ஜோக்குடா தம்பி. இந்தியாவையும் சேர்த்து வழக்கு வைக்கப்போறானாம். முட்டாள்பையன்
ReplyDeleteGood-for-nothing parliamentarians in Muslim community.
ReplyDelete1.Their hands are tied when Daya gamage install idols in Ampara.
2. Their hands are tied when this government try to set up a liquor factory in Kalkuda.
3. Their hands are tied in Dambulla mosque issues.
4. Their hands are tied to release the Saudi housing scheme in Ampara to hand them to affected Muslims.
They can only bragging to deceive Muslims in Kalminai and Sammanthuraai.