சுவிஸில் யூசுப் முப்தி - சிறப்பு பயான் நிகழ்வுக்கும் ஏற்பாடு
இலங்கையின் பிரபல இஸ்லாமிய அறிஞர் யூசுப் முப்தி, இஸ்லாமிய பிரச்சாரப் பணிக்காக தற்போது ஐரோப்பாவிற்கு வருகை தந்துள்ளார்.
அந்தவகையில் யூசுப் முப்தி, சுவிஸ் நாட்டிற்கும் வருகை தரவுள்ளார்.
சூரிச் - சிலீரன் நகரில் அமைந்துள்ள மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் எதிர்வரும் 08.04.2017 அன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து, மாலை 5 மணிமுதல் மஹ்ரிப் தொழுகைவரை யூசுப் முப்தியின் ''ஆன்மீக வறுமை காரணங்கள் மற்றும் தீர்வுகள்' என்ற தலைப்பில் சிறப்பு பயான் நிகழ்வு நடைபெறவுள்ளது.
சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள், இந்த பயான் நிகழ்வில் பங்கேற்று தமது இஸ்லாமிய மார்க்க அறிவை வளர்த்துக்கொள்ள முன்வருமாறு அன்புடன் அழைப்பதுடன், இந்த தகவலை ஏனைய சகோதர சகோதரிகளுக்கு எத்திவைத்து அவர்களையும் இந்த பயான் நிகழ்வில் பங்கேற்பதற்கு உதவுமாறு வேண்டுகிறோம்.
EIMF AND MASJID AL RAWDAH ADMIN.

Mashaallah Good Efforts
ReplyDelete