பாதுகாக்கப்பட்ட வனமாக இருந்தால், பள்ளிவாசல்கூட இருக்கமுடியாது - ராஜித
-DC-
ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட காணிகள் உண்மையிலேயே பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமா இல்லையா என்பதை கண்டறிய விசாரணைகள் இடம்பெறுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலார் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை,பாதுகாக்கப்பட்ட வனமாக இருந்தால் முஸ்லிம் பள்ளிவாசல், வைத்தியசாலை, பாடசாலை என்பன இருக்கமுடியாது எனவும் காணி உறுதிகளும் இருக்கமுடியாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார். எனினும் இது தொடர்பாக சரியான எல்லையை கண்டறிய நில அளவீடொன்றை மேற்கொன்டு உண்மையை கண்டறிய வேண்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment