Header Ads



கிறீஸ் மனிதன் என நினைத்து தாக்குதல் - மனைவியின் உருக்கமான கோரிக்கை, மொர­க­ஹ­ஹேனயில் சம்பவம்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

மொர­க­ஹ­ஹேன பிர­தே­சத்தில் புதி­தாக குடி­யே­றிய நப­ரொ­ருவர் மீது கிறீஸ் மனிதன் எனக் கருதி அப்­ப­குதி மக்கள் சரா­ம­ாரி­யாக தாக்­குதல் மேற்­கொண்­டதில் அவர் காய­ம­டைந்­துள்­ள­தாக தாக்­கு­த­லுக்கு இலக்­கான நபரின் சகோ­த­ரனால் பேஸ்­புக்கில் இடப்­பட்ட பதி­வொன்று வைர­லாக பர­வி­வ­ரு­கின்­றது.

கடந்த 1 ஆம் திக­தி­யன்று மொர­க­ஹ­ஹேன பிர­தேச மக்கள், ஊருக்குள் கிறீஸ் மனிதன் ஒருவன் புகுந்­து­விட்­ட­தாக கூச்­ச­லிட்டு, கூரிய ஆயு­தங்­களை எடுத்துக் கொண்டு சென்­றுள்­ளனர். கிரா­ம­மக்­களின் கூச்சல் சத்தம் கேட்டு வீட்­டி­லி­ருந்த மேற்­படி நபர் வெளியே சென்று அவ­தா­னித்­துள்ளார்.

அதன்­போது, அப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு பரீச்­ச­ய­மில்­லாத இந்­ந­பரை கிறீஸ் மனிதன் என நினைத்து ஆயு­தங்­களை கொண்டு அவரை சர­மா­ரி­யாக தாக்­கி­யுள்­ளனர்.  தனது கணவர் தாக்­கப்­ப­டு­வ­தனை கண்டு ஓடி­வந்த அவ­ரது மனைவி, அவரை விட்­டு­வி­டு­மாறு கோரிய போதும் பிர­தே­ச­வா­சிகள் தொடர்ந்தும் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

பின்னர் தாக்­கு­தலில் காய­ம­டைந்த நபரை அவ­ரது மனைவி முச்­சக்­கர வண்­டி­ஒன்றில் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்ல முயற்­சித்­தி­ருந்த போதிலும் அவரை கொண்டு செல்­ல­வி­டாமல் கிராம மக்கள் தடுத்­தி­ருந்­தனர்.

அதன்­பின்னர் அவர், அம்­பி­யூலன்ஸ் ஒன்றை வர­வ­ழைத்து அதில் காய­ம­டைந்த நபரை ஹொரணை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்றுள்ளார். வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நபரின் கைவி­ரல்கள் இரண்டு கடு­மை­யாக சேத­மடைந்துள்­ள­மை­யினால் அவற்­றை அகற்ற வேண்­டுமென வைத்­தி­யர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

காய­ம­டைந்­த­வரின் மனைவி இது தொடர்பில் தெரி­விக்­கும்­போது, நாங்கள் இப்­ப­கு­திக்கு புதிது என்­ப­தனால் எனது கணவர் இப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு அறி­முகம் இல்லை. எனினும் சில தினங்­க­ளாக கிறீஸ் மனிதன் என அறி­யப்­படும் நிர்­வா­ண­மான மர்ம மனிதர் ஒரு­வரால் இங்­குள்ள மக்­களின் உடை­மைகள் திரு­டப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நிர்­வா­ண­மான நப­ரொ­ரு­வரே கிறீஸ் மனிதன் எனக் கூறப்­பட்­ட­போ­திலும், ஆடை­ய­ணிந்­தி­ருந்த எனது கண­வரை கிராம மக்கள் தாக்­கி­ய­தோடு அவரை ஊரை விட்டு செல்­லு­மாறும் கொலை மிரட்டல் விடுத்­த­துடன் பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

எனினும் தனது கணவர் நிரபராதி எனவும் அவர் அவ்வாறான தவறுகள் எதனையும் செய்யவில்லை எனவும் இதுதொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட நபரின் மனைவி கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.