Header Ads



ஜனாதிபதி மைத்திரிபால கண்டனம்

ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த திடீர் தாக்குதலில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் 45 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#lka condemns the incident at #SaintPetersburg which caused deaths and injuries to many in #russia. My condolences to affected families.

— Maithripala Sirisena (@MaithripalaS) April 3, 2017


No comments

Powered by Blogger.