Header Ads



ஹமாஸ் + ஹிஸ்புல்லா ஏவுகணையை முறியடிக்க இஸ்ரேல் தயார்

இஸ்ரேலின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் கூட்டாக மேம்படுத்தப்பட்ட ஏவுகணை இடைமறிப்பு கேடயம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

தெற்கு லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவிடம் இருக்கும் இடைத்தூர ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையிலேயே இந்த புதிய கேடயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டுள்ளது.

மத்திய இஸ்ரேலில் உள்ள ஹாட்சோர் விமானத்தளத்தில் இடம்பெற்ற இது பற்றி நிகழ்வில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, எதிரிகள் எமது இராணுவ திறனை பரீட்சித்து பார்க்க வேண்டாம் என்று எச்சரித்தார். “யாரேனும் எம்மை தாக்க நினைத்தால் பதிலுக்கு தாக்குவோம். எமது இருப்புக்கு அச்சுறுத்தல் விடுப்போரின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஏவுகணை இடைமறிப்பு மூலம் இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது. இதன்மூலம் காசாவில் இருந்து எறியப்படும் குறுகிய தூர ரொக்கெட்டுகள் தொடக்கம் நீண்ட தூர ஏவுகணை வரை முறியடிக்க முடியுமாக உள்ளது.

No comments

Powered by Blogger.