Header Ads



இப்படியும் ஒரு நோய் (வீடியோ)


அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசிக்கும் கென்ட் சிரி, தன் மகன் கேடன் அதிகாலை எழுந்ததும் கையை  உயர்த்தி ராஜ புன்னகை புரியும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒரு வயதுக் கூட நிரம்பாத கேடனுக்கு ’Moro reflex’ என்னும் நோய் இருப்பதால் இரவுகளில் திடீரென்று கை கால்களை குலுக்கி எழுந்துவிடுவான். இதனால் கேடனின் தந்தை  கென்ட், இரவில் கேடனின் கைகளை உள்ளே வைத்து போர்வையை  உடல் முழுதும் சுற்றிவிடுவார்.

ஒவ்வொரு காலையும், சுற்றிவைத்துள்ள போர்வையை அகற்றும்போது கேடன் சுதந்திரம் கிடைத்தது போல் உற்சாகத்தில் கையை உயர்த்தி புன்னகை புரிவதை டென்ட் கவனித்துள்ளார். இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் கென்ட். இந்த வீடியோவை பகிர்ந்த ஒரே வாரத்தில் நெட்டிசன்ஸ் 2 மில்லியன் முறைக்கு மேல் பார்த்துள்ளனர். கேடனின் ராஜ புன்னகைக்கு உலகம் முழுவதும் ஃபேன்ஸ் அதிகரித்து வருகின்றனர். கேடனுக்கு முகநூலில் தனி பேஜ் உள்ளது (KPtheBaby). 

No comments

Powered by Blogger.