"முசலிப் மண் மீட்புப் போராட்டத்தை, கொச்சைப்படுத்த வேண்டாம்"
இதில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான், அதன் செயலாளர் நஜாமுஹம்மத், அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர் உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் உட்பட ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
மேலும், NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், "இந்த வர்த்தமானிஅறிவித்தல் மனிதாபிமானத்திற்கு எதிரான ஒரு செயலாகும். எனவே, இதன் மூலம் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு நீதிகிடைக்க வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தம்மாலான அனைத்துமுயற்சிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கும்.
இவ்வாறே, 2014 ஆம் ஆண்டும் மறிச்சுக்கட்டியின் மரைக்கார் தீவு மக்களின் காணிகளை அரசாங்கம் அநியாயமாகபறித்துள்ளமையை அறிந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் உடனேஅவ்விடயத்திற்கு விஜயம் செய்து தமது பூரண ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கினர். இறுதியில் சிறந்த தீர்வின்றிமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். அவ்வாறு இப்போராட்டத்தை இம்முறையும் கைவிட்டுவிட வேண்டாம். அத்தோடு , முஸ்லிம் அரசியல் தலைமைகள் இவர்களுக்கு ஏற்பட்டுள்ள மனிதாபிமான மீறலை கண்டிப்பதோடு, இவர்களது பேராட்டத்திற்கு பூரண ஆதரவையும் வழங்க வேண்டும். அத்தோடு, இவர்களின் மண் மீட்புப் போராட்டத்தைதமது சொந்த அரசியலாக்கி கொச்சைப்படுத்த வேண்டாம்" எனவும் கேட்டுக் கொண்டார்.

Post a Comment