Header Ads



ஜனாதிபதி, பிரதமருக்கு அமீரலி எச்சரிக்கை

வில்பத்துக் காணிக்கு அரசாங்கம் செய்யப்பட்டிருக்கின்ற வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டாரக் கிளை ஓட்டமாவடியின் அங்குராப் பணம் செய்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வில்பத்துக் காணிக்கு நீங்கள் செய்யப்பட்டிருக்கின்ற வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்படவில்லை என்றால் நாங்களும் மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும் என்ற விடயத்தை ஜனாதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெளிவாக தெரிவித்திருக்கின்றது.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஸவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சிறுபான்மை சமூகம் சொன்ன பொழுது நாங்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்காமல் முதலில் ஆட்சி பீடம் ஏறி அலங்கரித்தவர்கள்.

அதன் பின்னர் தபால் வாக்களிப்புக்கு பின்புதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸனர் சொன்னார்கள் மனச்சாட்சியின் படி வாக்களியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் தைரியமாக வெளியேறி இந்த அரசசை கொண்டு வருவதற்கு முக்கிய ஊண்றுகோளாக அமைந்திருக்கின்றோம்.

வில்பத்துக் காணி விடயத்தில் இழுத்தடிப்பு செய்து அல்லது நகர்த்தல் செய்தால் இதற்கு கடுமையான விலையை அரசியல் சமூகம் நகர்த்தப்படுகின்ற போது பெரிய விலை ஒன்றை கொடுக்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கையை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு சொல்லிக் கொள்ள வேண்டும் எனவும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Shouting like this is only "STAGING A POLITICAL DRAMA" to hoodwink the poor humble Muslims. Without doing this, Deputy Minister Amir Ali should immediately resign from his post and the government and sit in the opposition as an independent MP. Then we can give him due respect, Insha Allah. "The Muslim Voice" throws this challenge to Deputy Minister Amir Ali. Let's wait and see the out come, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. ஏதோ ஜனாதிபதி மாளிகையில் வைத்து சொன்னாரோ என்று தோன்றியது தலைப்பைப் பார்த்ததவுடன் 350 KM தள்ளி நின்று சொல்லியுள்ளார்.சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் அப்பாவி மக்களின் கூட்டத்தில் மீசையை முறிக்கி இருக்கிறார்,இந்த பேச்சுகள் எல்லாம் செரிவராது உடனடியாக அரசைவிட்டு வெளியேறுங்கள்.அப்பதான் இன்னும் இரண்டு வருடத்திலாவது உங்களின் பெரிய வீட்டு கட்சிக்காறர்கள் வெளியேறுவது பற்றி யோசிப்பார்கள்,

    ReplyDelete
  3. Rishad Badiudeen must give an ultimatum to this callous government without dragging time idly and he must quit his ministerial portfolio unless my3 reverse his decision.

    ReplyDelete
  4. Quit the Minister Post is not a ideal Solution in this regards our all the Muslims Ministers and parliamentarians unit to gather and talk to President & Prime minister regards this issue than decide to quit or continue.but they should do this immediately no need wasting time for useless talks

    ReplyDelete

Powered by Blogger.