Header Ads



முஸ்­லிம்­களின் நிலமீட்புப் போராட்டம், 8 ஆவது நாளாக தொடருகிறது


ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக்கோரி முசலி பிரதேசத்தில் உள்ள மக்கள் சுழற்சி முறையில் இன்று 8 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னேடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சுமார் 100 000 இற்கும் மேற்பட்ட காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கும் நோக்குடன் வெப்பல், மாவில்லு மரிச்சுக்கட்டி ,கரடிக்குழி மற்றும் பாலைக்குழி உள்ளிட்ட பல்வேறு இடங்களை வில்பத்து பிரதேசமாக ஜனாதிபதி வர்த்தகமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதனை கண்டித்தும், வர்த்தகமானி அறிவித்தலை ரத்து செய்ய கோரியும் முசலி பிரதேசத்தில் உள்ள மக்கள் சுழற்சி முறையில் இன்று 8 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னேடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.