Header Ads



வாகனங்களின் விலை 2 இலட்சம்வரை, உயரும் வாய்ப்பு

இறக்குமதி செய்யும் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய யென்னின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால், வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி 5 மில்லியன் பெறுமதியான வாகனங்களின் விலை சுமார் 2 இலட்சம் வரை  அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் தினேஸ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.