''அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் மைத்தி்ரிக்கே வெற்றி - கோத்தாவுக்கு வாய்ப்பில்லை''
அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்தி்ரிபால சிறிசேனவே வெற்றி பெறுவார் என்றும், கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
‘2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவே தெரிவு செய்யப்படுவார். முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மிகவும் விரும்பப்படும் ஒருவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார். அவரிடம் கோத்தாபய ராஜபக்சவிடம் இல்லாத அரசியல் ஆளுமையும், அனுபவமும் இருக்கிறது.
கோத்தாபய ராஜபக்ச திறமையான இராணுவ அதிகாரியாக இருக்கலாம். ஆனால், அரசியல் அனுபவம் அவருக்கு இல்லை. எனவே அதிபராவதற்கு அவருக்குத் தகுதியில்லை.
கடந்த தேர்தலில் தெற்கிலுள்ள வாக்குகள் பிரிந்து போயின. அதனால் எல்லா இனத்தவர்களாலும், மதத்தவர்களாலும் ஆதரிக்கப்படுபவர் தான் வெற்றி பெற முடியும்.
கோத்தாபய ராஜபக்சவினால் வடக்கு கிழக்கிலுள்ள வாக்குகளைப் பெற முடியாது. கடந்த தேர்தலில் அதுவே மிகவும் முக்கியமான பங்கை வகித்திருந்தது.
எனவே அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவினால் மைத்திரிபால சிறிசேனவுக்கு சவாலாக இருக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய M3 யின் நடவடிக்கைகளை பார்க்கும் பொது நாட்டுக்கு அவர் என்ன செய்தார் என்பதை விட முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைப்பதன் மூலம் இவருக்கு ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கை விட தத்போது மிக வேகமாக சரிய தொடங்கி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ReplyDeleteசகோதரர்களே! இனிமேல்தான் நாங்கள் எங்களது அரசியல்விடயங்களை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலை. முதலில் நமது முஸ்லீம் கட்சிக்காரர்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். அவர்களின் வேலை என்ன சமுகத்துக்கு என்ன செய்தார்கள்,செய்கிறார்கள் என்று.
ReplyDelete2. இனிமேலும் SLFP /UNP யையோ நம்பி எந்தநன்மையுமில்ல. நாங்கள் இனிமேல் ஜேவிபின் பக்கம் செல்வதுதான் எங்களுக்கு சிறந்தது. எதனையோ முஸ்லிம் அமைச்சர்கள்,MPகள் இருந்தும் பாராளுமன்றத்தில் பேசாதவற்றை இவர்கள் எங்களுக்காக பேசிதையும் எல்லா இன்னமும் ஒன்றே என்று நடந்துகொள்வதையும் பார்க்கிறோம்.