Header Ads



மாலைதீவு ஜனாதிபதி கொலை முயற்சி, சந்தேக நபரை விடுவிக்க உதவும்படி மைத்திரியிடம் கோரிக்கை

மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீனை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையரை விடுதலை செய்வதற்கு உதவுமாறு அவரது உறவினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீனை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இலங்கையர் ஒருவர் 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், குறித்த நபரின் உறவினர்களே அவரை விடுதலை செய்வதற்கு உதவுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறிய நண்பரின் வார்த்தையை நம்பி குறித்த இலங்கையர் மாலைதீவுக்கு சென்றதாகவும், எனினும் குறித்த நண்பர் அவரின் பணத்தினை கொள்ளையிட்டு தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீனை கொலை செய்ய முயற்சித்ததாக கருதி குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டார்.

எனினும்,சந்தேகநபரை அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்திய போது, சாட்சியாளர்களுக்கு அவரை அடையாளம் காண முடியவில்லை.

இருப்பினும், ஜனாதிபதியை கொல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் நீண்டகாலமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை விடுதலை செய்வதில், இராஜதந்திர ரீதியான தலையீடு அவசியம் என அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்

கடந்த ஐந்து மாதங்களாக தண்டனை இன்றி குறித்த இலங்கையரை மாலைதீவு அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். எனவே அவரின் விடுதலைக்காக உதவுமாறு ஜனாதிபதியிடம் குறித்த நபரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.