Header Ads



'தம்­புள்ளை பள்­ளி­வாசலுக்காக, மன்­றா­டியும் அக்­கறை கொள்­ள­வில்லை'


நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து உட­னடித் தீர்வு பெற்­றுத்­தர வேண்டும் என தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாகம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது தொடர்­பாக பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை உறுப்­பி­னர்கள் 17 பேரும் கையொப்­ப­மிட்ட மகஜர் ஒன்று அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைத் தலை­வ­ருக்கும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது என பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் உப செய­லாளர் எஸ்.எச்.எம். ரவூப் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் 'விடி­வெள்ளி'க்கு கருத்து தெரி­விக்­கையில்; ‘மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் பள்­ளி­வா­சலை இடம்­மாற்றிக் கொள்­வ­தற்கு 1 ½ ஏக்கர் காணி வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளிக்­கப்­பட்டும் பள்­ளி­வாசல் நிர்­வாகம் மறுத்­து­விட்­டது என தெரி­விக்­கப்­ப­டு­வது பொய்­யான தக­வ­லாகும். பள்­ளி­வா­ச­லுக்கு காணி தரு­வ­தாக எவரும் கூற­வில்லை.

என்­றாலும் கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை பள்­ளி­வா­ச­லுக்கு காணி தரு­வ­தாக கூறி­யது. ஆனால் எவ்­வ­ளவு காணி தரப்­படும் எனக் கூற­வில்லை. பள்­ளி­வா­சலை தூர ஓர் இடத்­துக்கு இடம் மாற்­றினால் பிரச்­சி­னைகள் ஏற்­படும் என்ற வகை­யிலே கடந்த காலங்­களில் பள்­ளி­வா­சலை நாம் இடம் மாற்­றிக்­கொள்ள விருப்பம் தெரி­விக்­க­வில்லை.

தற்­போது இன நல்­லி­ணக்கம் கரு­தியே பள்­ளி­வா­சலை இடம் மாற்­றிக்­கொள்ள விருப்பம் தெரி­வித்­துள்ளோம். அண்­மையில் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை காணி­யொன்­றினை எமக்குக் காண்­பித்­தது.

என்­றாலும் அக்­கா­ணிக்­க­ருகில் மது­பா­ன­சாலை அமைந்­தி­ருப்­பதால் அக்­கா­ணிக்கு மறுப்புத் தெரி­வித்­துள்­ள­துடன் பள்­ளி­வா­ச­லுக்கு பொருத்தமான மாற்றுக் காணியொன்று வழங்குமாறே கோரிக்கை விடுத்துள்ளோம்.

 முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் அமைச்சுப் பத­வி­களில் இருந்த முஸ்லிம் அமைச்­சர்­க­ளிடம் தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்குத் தீர்வு பெற்­றுத்­த­ரும்­படி மன்­றா­டியும் அவர்கள் அதில் அக்­கறை கொள்­ள­வில்லை.

எனவே முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக, தீர்வு பெற்றுத்தர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

 ARA.Fareel

3 comments:

  1. அந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தான் இந்த ஆட்சியிலும் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. Where is Mr.Hisbulla ? He was involved with this issue in Mahinda period for political benefit & in present govt. also he is a minister ! BUT no action on this issue! THIS IS THE MUSLIM LEADER'S REAL FACES!

    ReplyDelete
  3. Bothe Regimes same allah will protect his mosque our ministers and mps are nothink
    we can pray and make dua only there no other any sulution.

    ReplyDelete

Powered by Blogger.