Header Ads



உண்ணாவிரதப் போராட்டத்திற்காக, பிணை வழங்கக் கூடாது - அனுரகுமார

உணவு தவிர்ப்பு போராட்டத்திற்காக பிணை வழங்கக் கூடாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.

ஜே.வி.பி.யின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது,

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் பிணையில் விடுதலையாவதற்காக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டாலும், அதற்கு இசைந்தாலும் அது பிழையான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

இவ்வாறான செயற்பாடுகள் நீதிமன்றின் நடவடிக்கைகளை ஸ்தம்பிதமடையச் செய்யும்.

உண்மையில் எமது நாட்டின் வரலாறு முழுவதிலும் சட்டம் அமுலாக்கலின் போது எஜமானருக்கு ஒரு விதமாகவும், தொழிலாளிக்கு ஒருவிதமாகவும் காணப்படுகின்றது.

மேலும், ஒர் கள்வனை பிடிக்கும் போது அவன் ஏனைய கள்வர்களை பிடிக்குமாறு கோரி வாதம் செய்ய முடியாது.

உணவு தவிர்ப்பு போராட்டத்தின் அடிப்படையில் பிணை வழங்கக் கூடாது.

சிறையில் இருக்கும் அனைவரும் பிணை கோரி உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தினால் என்னவாகும்?

சிறையில் இருப்பவர்கள் அல்ல சிறைக்கு வெளியில் இருக்கும் சகாக்களே போராட்டம் நடத்த வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.